சனி, 2 ஜூன், 2012

நண்பர்களே ,சற்று நிதானமாக சிந்தித்து பார்க்க உங்கள் முன் சில உண்மைகளை வைக்க கடமை பட்டிருக்கிறேன் இது அரசியல் அல்ல ஆதங்கம் ,உண்மை நம்மின் யாமாளி தனம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கான உதாரணம் ,இன்றைய தினத்தந்தி நாளிதிழில் தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்த்பட்டோர் மற்றும் சிறுப்பான்மைனர் நலத்துறை ஓராண்டு சாதனையாக தமுக்கம் போட்டுரிக்கிறது அதில் பிற்படுத்தப்பட்டோர் சார்பாக கள்ளர் ,பிரமலை கள்ளர் போன்ற வகுப்பினருக்கு தமிழக அரசு செய்துள்ள சாதனைகளை பெருமையுடன் பறை சாற்றியுருக்கிறது ,அதேபோல் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிற சாதனை மட்டுமே முழு பக விளம்பரமாக வந்திருக்கிறது ,நாங்கள் கேட்பதெல்லாம் நடப்பது நம்ம ஆட்சி நடப்பது நம்ம ஆட்சி என்று பெருமை பட்டுகொல்கிரோமே அது சரியா என்பது தான் பிற்படதப்ப்பட்டோர் என்றால் வெறும் கள்ளர் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் தானா ,காலம் காலமாக அதிமுகவின் வாக்கு வங்கியாக ,நம்வீட்டு குழந்தையை போல் வளர்த்து விட்டோமே " முத்தரையர் " இனம் அந்த இனத்திற்கு இந்த அரசு என்ன செய்ததது என்று ஒரே ஒரு வரி கூட இந்த முழு பக்க விளம்பரத்தில் குறிப்பிட முடிய வில்லை ஆனால் நடப்பது நம்ம ஆட்சி ஒட்டு மொத்த முத்தரையர் இனமும் குத்த்தகைக்கு எடுத்திருக்கிற கட்சியின் ஆட்சி ,நாம் எப்போது சிந்திக்க போகிறோம் ,நம்மை நாம் எப்போ சுய பரிசோதனை செய்து கொள்ள போகிறோம் நம் இனத்திற்கான உரிமையை எப்போது பெற போகிறோம் ? தயவு செய்து இன்றைய தினத்தந்தி நாளிதழ் தமிழக அரசின் முழு பக்க விளம்பரத்தை அனைவரும் படிப்பது அவசியம் ,கண்டிப்பாக படியுங்கள் ,திருச்சியில் வரகனேரியில் முத்திரியர் பள்ளி செவந்திலிங்கம் அவர்களின் பெயரில் இடிந்த நிலையில் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளது அந்த பள்ளிக்கு கள்ளர் பள்ளிகளுக்கு அளித்த உதவியில் ஒரு பகுதி செய்து இருக்குலாமே ,நம் பிள்ளைகள் மழை வெய்யலில் அவதி படுவதை தடுத்திருக்கலாமே ? நண்பர்களே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பது அவசியம் ,அதைவிட முக்கியம் காலத்தின் கட்டாயம் நம் இனத்திற்கான வலுவான சுயனலமிலாம்மல் செயல் படகூடிய அரசியல் கட்டமைப்பு உருவாக்குவது எப்போது செய்ய போகிறோம் .?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக