புதன், 10 அக்டோபர், 2012

கலெக்டர் அய்யா ! நீங்க நல்ல  இருக்குணும் ,ரொம்பநாள் வேலூரில் இருக்குனும் !!

இரண்டு வாரத்திருக்கு  முன்னர் வேலூர் மாவட்ட ஆட்சியராக  பதவி ஏற்றுக்கொண்ட தினத்தில் இருந்து சுறு சுறுப்பாக செயல் பட்டுகொண்டிருக்கிறார் அதுவல்ல விஷயம் மனிதாபிமானம் மற்றும் நேர்மை ,வீண் விரயம் இல்லமால் செயல் பட்டு மாவட்ட மக்களை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் ,இப்படி ஒரு கலெக்டர் வந்திருக்காரே ,இவர் இங்கே ரொம்ப நாள் இருக்குனும் என்று வாழ்த்துகிறார்கள் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல இரண்டு நாளில் நடந்த நிகழ்ச்சியை ஆட்சியர் அலுவலக பணியாளர்களும் பொதுமக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் ,அது ஆட்சியர் வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு நிகழ்ச்சிக்காக புறப்பட்டு போகும் போது நிறைய கார்களில் அதிகாரிகள் கிளம்ப அதை கவனித்தவர் எதற்கு இத்தனை  கார் மூன்றே கார் மட்டும் போதும் என்று கூறி சிக்கன நடவடிக்கை கடைப்பிடித்து மக்கள் வரிபணத்தை சேமித்தவர் கே .வி குப்பம் அருகே விபத்துக்குள்ளாகி அடிப்பட்டவர்கள் சாலையில் துடித்து கொண்டிருக்க காரில் இருந்து இறங்கி விசாரித்தவர் ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டு கேட்ட போது இப்போது தான் தகவல் கிடைத்து கிளம்புகிறோம் என்று சொன்னதை அடுத்து அவர்களை தாங்கள் வந்த   ஒரு காரில் போட்டுகொண்டு கூட வந்த உயர் அதிகாரிகளும் அதே காரில் ஏற்றி மருத்துவ சிக்கிச்சைக்காக  சென்றார்கள் என்பதை கூறி அப்பகுதி மக்கள் பாராட்டுகிறார்கள் இந்த மனிதாபிமான மிக்க செயலை அப்பகுதி மக்களோடு சேர்ந்து நாமும் பாராட்டுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக