தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்
தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க திருச்சி ஜே.எம். 2 கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை சிலர் அடித்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செல்வகுமார் எடமலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
செல்வகுமாரின் புகாரை ஏற்று தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், போலீசார் எதற்காக, எந்த வழக்குக்காக கைது செய்தனர் என்ற விபரமே தனக்கு தெரியாது என்று கூறினார். இதனிடையே விஸ்வநாதன் கைதால், திருச்சி புறநகரில் சிறிது பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக