ஞாயிறு, 16 ஜூன், 2013

பார்ப்பனரைக் கொழுக்க வைத்த ‘தமிழரும்’, அடக்கி வைத்த ‘திராவிடரும்’
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11241&Itemid=139

‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்துக்கு’ ஒரு விளக்கம்

இராஜராஜ சோழன், பார்ப்பனர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தான் என்றும், களப்பிரர்கள், பல்லவர்கள் எனும் திராவிடர்கள்தான் பார்ப்பனியத்தை வளர்த்தார்கள் என்றும், ‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்’, ‘புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு’ பதில் என்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. பார்ப்பன நிலப்பிரபுவத்தின் தூண்களாக விளங்கிய மாமன்னர்களை பொதுவுடைமைப் புரட்சிக்காரர்கள் புகழ் மாலை சூட்டிப் பாராட்டிக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை. ஆனால் ‘திராவிடர்’ என்று இவர்கள் கூறும் களப்பிரர் ஆட்சிதான் பார்ப்பனர்களை எதிர்த்து நின்றது என்பதற்கு ஒரே ஒரு சான்றை முன் வைக்கிறோம். ஒரு வேளை அந்த பார்ப்பன எதிர்ப்பைத்தான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ?
களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலம்தானே.....

நான் படித்தக் காலத்திலிருந்தும், எனக்கு முன்னால் படித்தக் காலத்திலிருந்தும் இப்போது பிள்ளைகள் படிக்கிற காலத்திலும் குப்தர்கள் காலம் பொற்காலம் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, ‘யாருக்கு’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. குப்தர்கள் காலம் பொற்காலம், யாருக்கு? களப்பிரர்கள் காலம் இருண்ட காலம், யாருக்கு? பார்ப்பனர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் பொற்காலமாக இருந்திருக்கிறதோ அதை நாட்டின் பொற்காலமாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் இருண்ட காலமாக இருந்ததுவோ அதை நாட்டின் இருண்ட காலமாக அறிவித்தார்கள். களப்பிரர்கள் தமிழர்களாக இல்லையா என்பது வேறு.
அதே நேரத்தில் அவர்கள் சமூக நீதிக்கு உட்பட்டுப் பல செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் எழுதி இருக்கின்ற நூல் ஒன்றில் மிக அருமையாகப் பல சான்றுகளைத் தந்து இருக்கிறார்கள். உழைக்காமல் இருக்கிற பார்ப்பனர்களுக்கு நிலத்தை கொடுத்த காலம் பொற்காலம் என்றும் அவர்களிடமிருந்து அதை பறித்து உழைக்கும் மக்களுக்கு பங்கீட்டு கொடுத்த காலம் இருண்ட காலம் என்று சொல்வார்களேயானால் அதை எத்தனை மோசடியான புரட்டான வரலாறு என்பதை உணரவேண்டும்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23802

சங்க காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், அவர்கள் குறுநில மன்னர்களாக இருந்த போது அப்போதைய மொத்த தமிழக நிலபரப்பும் அவர்கள் வசம் இருந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் நலிந்து போய், முழுக்க முழுக்க சமணர்களின் ஆட்சிதான் நடைபெற்றது. மேலும் அந்த ஆட்சியில் பார்ப்பன‌ர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த சோழர்களின் ஆட்சி காலத்தில்தான் பார்ப்பன‌ர்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தேவாரம், திருமறைகளை தொகுத்து ஓத, 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோயிலில் தமிழில் பாடல்கள் பாடிட பாட்டாலகன், அமுதன் காணி, வானராசி கூத்தன், சூற்றி எனும் நால்வர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். வடமொழியை விட, தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இராச ராசா சோழன் காலம் பொற்காலாமா? பார்ப்பனர்களின் காலாமா ?

தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி" "தமிழர்களின் பொற்காலம்" என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!
பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்!. வரலாற்று பெருமையாக சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில் தான் புண்ணியம் தேடிக்கொள்வதற்காக இராஜராஜன் அப்பாவி மக்களை வாட்டி வதைத்திருக்கிறான்!.

வலங்கை-இடங்கை!

வலங்கை இடங்கை குல வேறுபாடு ராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது. இந்த இரண்டு பிரிவுகளிலும் இம்பெறாத தங்களை மேன்மக்களாக கருதிகொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகதொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை சாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடைபெற்றுள்ளது.

பார்ப்பனர்களை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத்தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
சூழ்ச்சியில் ஆட்சி!

இராஜராஜன் சுந்தர சோழனின் இரண்டாவது மகன். தனது சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனின் துணைகொண்டு ஆட்சியில் இருந்த மூத்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் கதையை முடித்திருக்கிறான். அந்தப்பழி தன்மீது விழாமல் இருக்க உடனடியாக தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல், தண்டிக்கப்படவேண்டிய உத்தமசோழன் அரியனை ஏற ஆதரவுக்கரம் நீட்டினான்

பிராமனர்களுக்கு மரணதண்டனை அளித்தால் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்று சொல்லி ஆதித்ய கரிகாலன் கொலையில் உத்தம சோழனுக்கு உறுதுனையாக இருந்த பார்ப்பனர்களையும் தப்பவிட்டான்.

தான் அரியனை ஏறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்திருக்கிறான் இராஜராஜன்!. பார்ப்பனர்களுக்கு பொற்கால வாழ்வளித்த சூத்திர இராஜராஜனை அவன் கட்டிய கோவிலுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமல் வெளியேற்றியிருக்கிறது பார்ப்பனீயம்!. இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்கு தஞ்சை பெரியகோவில் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!
நண்பர்களே நமது இணைய தளமான www.mutharaiyar.org இணையத்தளம் சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிறது அதில் நம் இனம் குறித்த சரித்திம் ,கட்டிடம் ,கலை ,சிற்ப்பங்கள் ,என அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கிறது .
அதேப்போல் திருமண சம்பந்தப்பட்ட மணமகன் ,மணமகள் தேவை பகுதியும் சிறப்பாக இருக்கிறது அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,நீங்களும் பயன்படுத்தி , மற்றவர்களுக்கும் அறிமுக படுத்தி வைக்குமாறு வேண்டுகிறோம் .  www.mutharaiyar.org

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா -மே 23-2013.

வேலூரில் மா மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ,வெகு சிறப்பாக நடைபெற்றது நமது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சதய விழாவில் இருநூற்றுககும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர் வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடை பெற்ற சதய விழா கொண்டாட்டம் அடுத்த ஆண்டு இதை விட சிறப்பாக நடத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் .இதில் முத்தரையர் சங்க மாவட்ட தலைவர்கள் மற்றும் தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் திரு ,ராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் ,இந்த கூட்டத்தில் ,சண்முகம் முத்தரையர் ,ஏகாம்பரம் ,மனோகரன் ,திரு ,ராசமாணிக்கம் ஆகியோர் உரையாற்றினோம் .முரளி ,நன்றி கூறினார் .இந்த விழாவை ஏற்பாடு செய்ய எனக்கு ஆதரவு அளித்த திரு சதீஷ் குமார் அவர்களுக்கு நன்றி -அன்புடன் சண்முகம் முத்தரையர் ,வேலூர் .












சனி, 8 ஜூன், 2013

மே திங்கள் 23ஆம் நாள் திருச்சியில் முத்தரையர் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1338ஆம் சதயா விழா வை சிறப்பாக கொண்டாட முடியா வண்ணம் ஊர்வலதிருக்கு தடைவிதித்து திருச்சி நோக்கி வந்த தோழர்களின் வாகனத்தில் இருந்த சங்க கொடிகளை எல்லாம் அகற்றி தடை விதித்து அதிகாரம் காட்டியது இந்த அராசாங்கம் செய்த மிக நல்ல காரியம் காராணம் தமிழகம் முழுக்க எல்லா ஊர்களிலும் சதயா விழா  கொண்டாட ஆக்கமும் ஊக்கமும் அளித்தது நமது இனம் தமிழகம் முழுக்க நம் இனத்தின் இனத்தின் பலத்தை காட்ட உதவியது எவ்வளவு பெரிய நற்காரியம் ,தென் மாவட்டம் மட்டுமின்றி வட மாவட்டங்களிலும் கொண்டாட வழி செய்தது இளைஞர்கள் ஆர்வத்துடன் கொண்டாடினோம் அதுவும் வேலூர் மாவட்டத்தில் பிரமாண்டமாக கொண்டாடிய முத்தரையர் திருவிழா விருக்கு ஏற்பாடு செய்ய உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியுமா ?தமிழக அரசுக்கு நன்றி !நன்றி !!!