செவ்வாய், 31 மே, 2011
ஞாயிறு, 29 மே, 2011
singa illaignargale
சிங்க இனத்தின் வேர்களே ,வருங்கால தூண்களே கீற்று தளதிலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்களின் முகத்தையே நிலை கண்ணாடி முன் நிறுத்தி இருக்கிறேன் குருதி கொப்பளிக்கிறது அந்த கட்டுரைன் ஒவுஒறு வார்த்தைகளும் .சாட்டைகளால் அடிப்பது போன்று வலி உடம்பில் அல்ல உள்ளத்தில் ,முத்தரையர் இளைஞர்கள் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இல்லை நாகரிகமாக இல்லை பொருளாதரத்தில் முன்னேற்றம் இல்லை அவர்களை விட காலணி இளைஞர்கள் எல்லாவிதத்திலும் முனேறேரியுள்ளர்கள் அதனால் எங்கள் இளைஞர்கள் பின்னால் முத்தரைய பெண்கள் வருகிறார்கள் அதனால் எங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்கின்ற இந்த வார்த்தைகள் நெருப்பின் மீது நிர்ப்பதைபோல் உனேர்கிறேன்,முத்தரைய இளைஞே !இன்னும் சிங்கம் சிங்கம் என்று கூறிக்கொண்டு நடிகர்கள் பின்பும் ஏமாற்றும் கட்சிகளின் பின்பும் செல்லாமல் ஏமாளியாக இராமல் இனியேனும் விழித்திகொண்டு கல்வி பின்னால் செல் ,நமக்கென இயக்கத்தை பலபடுத்தி நமக்கான தனி இட ஓதிக்கிடு பெறாவிட்டால் ,உன்னால் திருமணம் கூடசெய்யமுடியாது காரணத்தை பரளிபுதூர் உணர்த்தும் .வீரம் சிங்கம் போல் இருந்தால் மட்டும் போதாது ,விவேகமும் கல்வியும் அவசியம் அவசரம் ,ஆகவே நம் இளைஞர்கள் எல்லா போட்டி தேர்வுகளிலும் பங்கெடுத்து வெற்றி காண வேண்டும் இதை ஒரு பிரசார இயக்கமாக எடுத்து செல்ல வேண்டும் விழிப்புணர்ச்சி கொண்டுவரவேண்டும் ,வருங்காலம் நமது என்று இந்த சமுதாயதிற்கு புரிய வைக்க வேண்டும் ,செய்தாக வேண்டும் ,மடிந்த பிறகு அல்ல !ராஜ வம்சம் தீய்ந்த வம்சம் என்று கூற வைத்து பெரும்பிடுகு அவமான படாமல் பார்த்கொல்.
சனி, 28 மே, 2011
வெள்ளி, 27 மே, 2011
EN INAME
என் இனமே தமிழகத்தின் முத்தரைகளையும் ஆண்ட மூத்த இனமே ,இன்றைய தமிழகத்தின் அரிச்சுவடியே ,இளைஞ்சனே ,முத்தரைய இனத்தின் வருங்கால தூனே பார்த்தாயா இன்றைய தமிழகத்தை ஆளபோகும் அமைச்சபரிவாரத்தை நம் இனத்தின் பிரதிநிதித்துவம் என்ன சதவிதம் ,மற்ற இனத்தின் சதவிதம் ,நம் மக்களின் சதவீதம் என்ன என கணக்கிட்டால் குருதி வெப்பமாகிறது அணு உலை போல ,உனக்கும் அதேபோல்தான் இருக்கும் என்பதை நானும் உணர்கிறேன் ,அனால் நாம் உணரபோவது எப்போது ,ஆனாலும் ஒன்று மட்டும் என்னை தூங்க விடாமல் ,துரத்தி துரத்தி வீனா எழுப்பிக்கொண்டே இருக்கிறது ,அது நம் இனத்தின் வெறும் 20 %வாக்குகள் வாங்கும் திமுகவும் நமக்கு அமைச்சரவையில் ஒரு அமைச்சரை நியமிக்கிறது ,அனால் 70 %வாக்குகள் வாங்கும் அதிமுகவும் ஓனே ஒன்னு கண்ணே கண்ணு என்று போனால் போகிறது போடா என்ற கணக்கில் விளையாட்டாக ,விளையாட்டு துறையை ஒதுக்குகிறது ,யோசித்து பாருங்கள் காலம் காலமாக நம் இனத்தின் ஓட்டுமொத்த வியாபாரியை போல ஒட்டுமொத்தமாக ஓட்டுகளை வாங்கிக்கொண்டு ,வாழைபழ தோலை போல விசுவது போல விசுவது என்ன நியாயம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமானால் இருவராக இருக்குலாம் ஆனால் நம் இனத்தின் வாக்குகள் எவ்வளவு ?அவர்கள் பெற்றது எவ்வளவு ,நம் இனத்திருக்கு அதிமுக ஒதுக்கியது தொகுதிகள் எத்தனை ,திமுகவில் நான்கு அதிமுகவில் இரண்டு ,இரண்டிலும் வெற்றி மறந்து விடகூடாது அதில் ஒன்று ஆலங்குடி ,இன தளபதியை இன துணை இழந்த தொகுதி ,திருவெங்கடாசலம் அவர்களின் புதல்வன் ராஜபாண்டி போட்டிட்ட போதும் கு,ப கி வெற்றி பெற்றிருக்கிறார் ,அனுபவஸ்தர் ,திறமைசாலி ,ஆனால் ஒதுக்கப்பட்டு இருக்கிறார் ,ஒதுக்கபட்டது அவர் மட்டும் இல்லை நம் இனமும்தான் என்பது ஏன் நமக்கு புரியவில்லை ,அதிமுக நம் இனத்தின் தலையில் மிளகாய் அரைப்பது நமக்கு ஏன் தெரியவில்லை இதே மற்ற இனமாக இருப்பின் ஒன்று கூடி தேர் இழுதிருபார்கள்,புரியவில்லையா ?போரடிருப்பார்கள் ,வென்று இருப்பார்கள் ,நமக்கு மட்டும் ஏன் உரைக்கமாட்டேன்கிறது என்று புரியவில்லை ,குட்ட குட்ட கொட்டு வாங்குவதே சுகம் என்று பழகிவிட்டதா?முத்தரையரே? அல்லது பெரும்பிடு ஆண்டதே போதும் நாம் வேறு எதற்கு ?என்று நினைத்து விட்டாயா? இளம் சிங்கமே இனி நம் இனத்தின் வருங்காலம் உன் எண்ணத்தில் ,சிந்தனையில் ,வேர்வையில் ,உக்கிரத்தில்,உணர்ச்சிகளில்,சினத்தில் என்பதை மட்டும் மறந்து விடாதே ,
வீர முத்தரயனே,இளைஞ்சனே ,கோஷங்கள் உயர உயர கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை மறந்து விடாதே ,நமக்கான உரிமைகளை பெற்றே ஆகவேண்டும் ,அதற்காக நாம் ஒருங்கிணைவோம் ,போராடுவோம் ,வெற்றி பெறுவோம் ,
என் இன தலைவர்களே .முனோடிகளே,இளைஞர் போராட முனைகிறோம் ,உங்கள் பங்குக்கு என்ன செய போகபோரிர்கள் ,?
புதன், 25 மே, 2011
alli raani durbaar , ALI RANI DURBAR or TUQLUK
தமிழகத்தில் அல்லி ராணி ஆட்சியா (அ) துக்ளக் ?ஆட்சியா ? மக்கள் ஆட்சி மட்டும் நடக்க வில்லை என்பது மட்டும் திண்ணம் ! ஏனெனில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் கட்டிய இராணுவம் சொந்தம் கொண்டாடும் ஜார்ஜ் கோடையில் அடிமை கால ஆட்சி மற்றும் இட நெருக்கடி என காரணம் சொல்லி குஈன் மாரிஸ் மகளிர் கல்லூரியை சட்ட சபை மற்றும் தலைமை செயலகமாக கட்டம் கட்ட திட்டம் போட்டு போராட்டம் எல்லாம் நடந்து ஸ்டாலின் கைது அளவுக்கு சென்றது ஜெ வின் கடந்த ஆட்சி காலத்தின் வரலாறு .அனால் இன்று எல்லாமே ,சரித்திரம் மாறுகிறது ,சென்ற ஆட்சி ஜெ வின் செயல்பாடுகள் துக்ளக் வேண்ட பட்டவரோ என்னவோ ,இன்றைக்கு கலைஞர் ஆட்சி காலத்தில் பார்த்து பார்த்து கட்டியது என்ற காரணத்தினால் புதிய தலைமை செயலகம் வேண்டாம் ,மேலவை வேண்டாம் ,சமசீர் கல்வி கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு போரட்டத்திற்கு பலனாக கலைஞர் ஆட்சி தீவிரமாக பரிசிலித்து சமசீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு அமுல் என்று அறிவித்து அனைத்து பணிகளும் முடிந்து ,ஜூன் ஆம் தேதி ஆரம்பமாக வேண்டிய காலத்தில் இப்போது இல்லை என அறிவித்து பிற்படுத்தப்பட்ட ,ஏழை பாழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வி மறுப்பது மக்களின் வரிப்பணம் வீணடிப்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லி ராணியின் அட்டகாசம், அரசு பணம் என்பது மக்களின் வேர்வை இரத்தம் அதை வீணடிப்பது என்பது காடேரி இரத்தம் குடிபதற்கு சமமம்,அவர்க்கு கருணாநிதி பிடிக்காது என்பதற்காக செய்வது !அப்படி என்றால் கருணாநிதி தமிழகத்தில் தான் இருக்கிறார் என்பதற்காக இவர் தமிழகத்தை விட்டுவிட்டு ஓடிவிடுவரா ? இவளவு செய்பவர் அதையும் செய்ய வேண்டியது தானே ?
அனைவரும் ஒருமித்து போராடவேண்டும் இல்லை என்றால் அவர் குடுக்க இருக்கிற ஆடு மாடு மேய்க்க அனுப்பவேண்டியதான் ?
முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் .
"நெற்றிக்கண் திறப்பினும் ,குற்றம் குற்றமே ".
செவ்வாய், 24 மே, 2011
திங்கள், 23 மே, 2011
ஞாயிறு, 22 மே, 2011
GREETINGS TO MR,ANAND,SRIRANGAM
IT'S HEARTY GREETINGS TO MR,ANAND WHO CONTESTED AGAINST TAMIL NADU CHIEF MINISTER ,EVENTHOUGH HE LOST THE BATTLE,BUT NOT THE GROUND ,LET;S GREET HIM HE SOME WHAT GOT SUCCESS IN GETTING OUR CAST VOTES AND CREATED CAST AWARNESS ,LET US JOIN GREET THEM
greet mr,rajapandiyan,ALANGUDI.
என் இனத்தின் முகவரியாக ,தனிக்கட்டு ராஜவாக ,தலைமைக்கே பாடம் கற்பித்த முத்தரையர் சிங்கம் ஆலங்குடி மறைந்த முன்னால் அமைச்சர் திரு ,வெங்கடாசலம் அவர்களின் புதல்வர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேர் அச்சுறத்தல்கள் தற்போதய ஆளும் கட்சி தலைவர்களால் வந்தபோதும் ஆலங்குடி வெங்கடச்சலத்தின் மகன் சிங்கம் என பயபடாமல் போட்யிட்ட திரு ராஜபாண்டியன் வெற்றி வாய்ப்பு இழந்தாலும் அவர்க்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அடுத்த தேர்தலில் வெற்றி பெற அவர்க்கு இனத்தின் சார்பிலே வீர வாழ்த்துகளை தெரிவிப்போம் வாருங்கள்.
ஞாயிறு, 15 மே, 2011
N.R.SIVAPATHY,MUSIRI ,TIRUCHI,DISTRICT
திரு.என். ஆர்,சிவபதி ,முசிறி தொகுதி ,அவர்கள் ,விளையாட்டு, மற்றும் இளைஞர் மேம்பாடு துறை மந்திரியாக அறிவிக்கப்பட்டு நாளை மந்திரியாக பதவி ஏற்க உள்ளார் .(விளையாட்டாக அறிவிக்கப்பட்டுலரோ)
singa thamizhar munnetra kazhagam
திரு ஆர்வி ,அவர்களின் சிங்க தமிழர் முனேற்ற கழகம் தமிழகமே எதிர் பாரத முடிவுகளால் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு நழுவி விட்டாலும் அவர் எடுத்த முயற்ச்சி வரும் காலங்களில் இனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன் படும் ,இந்த கட்சி நம் இனத்தின் வளர்சிக்கு இனி வரும் காலங்களில் அரசியல் ரீதியாக கொள்கைகள் வகுத்து செயல் பட்டால் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை .
அவர் எடுத்த முயற்சிக்கு நம் இனத்தின் சார்பில் மனமார்ந்த வாழுத்துகளையும்,நன்றிகளையும் உரித்தாக்குவோம் .
வெள்ளி, 13 மே, 2011
VAAZHTHUVOM VAARUNGAL
அன்பான முத்தரையர் நெஞ்சங்களே வாருங்கள் நம் இன வேட்பாளர்கள் ஆதிமுக சார்பாக போட்டியிட்ட திரு ,கு.ப .கிர்ஷ்ணன்,ஆலங்குடியில் 5127 வாகுகள் வித்தியாசத்தில் கொல்லப்பட்ட முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் அவர்களின் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். அதே போல முசிறியில் திரு ,சிவபதி அவர்கள் 43791 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் இவர்களை மனபுர்வமாக வாழ்த்துவோம் .
aiadmk victory ,curse or boon
அன்பான தமிழக வாக்கள பெருமக்கள் பெரும் எதிர் பார்ப்போடு ஆதிமுக அணியை வெற்றி பெற செய்திருக்கிறார்கள் ,அந்த எதிர் பார்ப்பு நிறைவேற்ற படுமா ? நிறைவேற்ற வேண்டும் !நிறை வேறும் என்று நம்பிக்கை கொள்வோம் ,நம்பிக்கைதான் வாழ்கை ,நிற்க திமுக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டது ,இலங்கையில் காங்கிரசோடு சேர்ந்துகொண்டு இன துரோகம் இழைத்து விட்டது ,ஆகவே திமுக ஆட்சியை விட்டு துரத்த பட வேண்டும் என்று கூறி நாயை விட கேவலமாக ஆட்சியை விட்டு தூக்கி எரிய பட்டு விட்டார்கள் இனியேனும் இலங்கை தமிழர் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்குமா ? கருணாநிதி பாவியாகி துரோகியாக்கி அடுத்த ஐயுந்து ஆண்டுக்கு தமிழகத்த பொறுத்தவரை அதிகாரத்தை பொறுத்தவரை கருணாநிதி செல்லாக்காசு!
இனியேனும் இலங்கை தமிழர்களின் நல்வாழுவுக்ககவே அவதரித்துள்ள சீமான்களும் ,தா.பா களும், நெடுமாறன்களும்,பணநாயகத்தை ஒழித்துவிட்ட வைகோ களும் ,சேர்ந்து தனி ஈழம் பெற்று தந்து விடுவார்கள் ,எனவே அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளை கூறிவிடுவோம் .
அனால் ஒன்று இப்போது தெரிந்து விடும் அவர்களின் சுயரூபம் ,உண்மையான நிலவரம் என்ன என்பதும் நாட்டுமக்களுக்கு தெரிந்து விடும் .
ஆனால் ஒரு உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,விவேகமும் ,ராஜதந்திரமும் இல்லாமல் வெரும் வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அலெக்ஸாண்டர் ஆனாலும் சரி நெப்போலியன் ஆனாலும் சரி வெற்றி பெறமுடியாது .
முள்ளி வாய்க்கால் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக் கொலையே நடுங்குகிறது தனி ஈழம் யாருக்காக? தமிழர் களுக்காக என்று கூறிவிட்டு லட்ச கணக்கான மக்களை இழந்து விட்டு ,இழந்துகொண்டு எண்ணத்தை சாதிக்க போகிறார்கள் இந்த தமிழக வாய்ச்சொல் விரரர்கள்,இந்த வாய்ச்சொல் வீரர்கள் மட்டும் மாவீரன் வரலாற்று நாயகன் பிரபாகரன் அவர்களிடம் அப்போதைய இந்திய பொது தேர்தல் முடிவுகள் எப்படிருக்கும் என்று கணித்து உண்மையை விளக்கி இருந்தால் ,விவேகமான ராஜதந்திரமான முடிவை கண்டிப்பாக எடுத்திருப்பார் ,லட்ச கணக்கான தமிழர்களின் உயிர்கள் பாது காக்க பட்டிருக்கும்.ஆனால் தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் கருணாநிதி பெயரை கெடுக்க வேண்டும் ,தாங்கள் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்கள் ஆகவேண்டுமேன்பதர்க்காக தாய் தமிழர்களின் உணர்சிகளை தங்களின் உயர்வுக்கு உரமாக்கி கொண்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை சாதிவெறி பிடித்த கம்யுனிச தலைவர் என்று கூறிக்கொண்டு தா.பா செயல் படுவுது கண்டிக்க படவேண்டிய ஒன்று ,
விடுதலை புலிகள் வேண்டுமென்றால் இந்த தமிழக காகித புலிகளை மன்னிக்கலாம் ஆனால் முள்ளி வாய்க்கால் ஆவிகள் இவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிக்கவே மன்னிக்காது ,இந்த காகித புலிகளின் முகத்திரை இன்று இவர்களின் பின்னால் இருக்கும் ஆதிக்க சக்திகள் கருணாநிதி மீது பழி போட்டு தப்பித்து இருக்கலாம் ஆனாலும் இவர்களின் முகத்திரை கிழிபட்டே தீரும் .
ஐயா காகித புலிகளே உங்களின் தமிழன துரோகம் இலங்கையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் தாய் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்சாதி ,பிராமண ஓநாய்களிடம் உங்கள் சுய நலத்திற்காக அடகு வைத்து விடாதிர்கள் .
" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "
செவ்வாய், 10 மே, 2011
2G SPECTRUM
நண்பர்களே என்ன நடந்தது இந்த பரபரப்பாக முக்கியமாக ஆங்கில ஊடகங்கள் இந்த அளவுக்கு முக்கியம் கொடுத்து மாத கணக்கில் மூச்சி விடாமல் சங்கே முழங்கு என்கிற அளவுக்கு !செய்தி சொல்லுகிறதே என்னது இது !நான் பால் வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அப்போது 70 வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் கடைகரர்கு புரிய வைத்தார் எனக்கும் புரிந்தது அதாவது ஒருவர் பி எஸ் என் எல் வாரியத்தில் இருந்து ஒருவர் ஏலத்தில் எடுத்து அதற்க்கான தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தி உரிமம் பெற்று வேறு ஒருவருக்கு விற்று விட்டார் ,அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் சேர்ந்து விட்டது .ஆக ஊழல் எங்கே வந்தது என்றால் இன்னும் அதிக விலைக்கு விற்கததனால் அரசுக்கு நஷ்டம் மற்றபடி விலைக்கு வாங்கியவர் அமைச்சர்க்கு பணம் கொடுத்து விட்டார் .விற்றவருக்கு லாபம் இதுதான் பெரியவர் கொடுத்த விளக்கம் .புரிந்ததா !உண்மையும் இதுதான் .
அவரே தொடருகிறார் இதில் அரசுக்கு நட்டம் இல்லை ,ராசா மட்டும் பொறுப்பில்லை ,இதற்கு முந்தைய அரசாங்கம் வகுத்து வைத்திருந்த கொள்கைகளே காரணம் ,கைது செய்வதனால் முந்தைய அரச்ங்கததிடமிருந்து தொடங்க வேண்டும் ,மேலும் இதற்கு முன் அதிக விலைக்கு வாங்கியவர்கள் வாங்கிய விலை அதிகம் நடத்த முடியாது என்று அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்துவிட்டார்களே ? அப்படி இருக்கும் பொழுது இன்னும் அதிக விலைக்கு விற்க முடியுமா ? நியாயமான கேள்வி ?உண்மையும் கூட ,ஏலம் முறைப்படி நடக்க வில்லை என்பது வாதம் ,அதற்கும் முந்தைய அரசே பொறுப்பு ஏன் என்றால் முதலில் வருபவருகே முன்னுரிமை என்கிற கொள்கை வகுக்கபட்டது முந்தைய அரசின் கொள்கையே , அது தற்பொழுதும் கடைபிடிக்கப்பட்டது பின்பு ஏன் இந்த கூப்பாடு என்றால் சில நிறுவனகள் அதுவும் பகாசூர நிறுவங்கள் ஏக போகமாக அனுபவிக்க பார்த்தது அது இப்போது முடிய வில்லை நிறைய நிறுவங்கள் வந்து விட்டதால் போட்டி காரணமாக பகாசூர நிறுவங்கள் சம்பாதிக்க முடியவில்லை விளைவு ராசா சிறை காங்கிரசுக்கு 6௦ தொகுதிகள் ,கூட்டுமந்த்ரிசபைகு அச்சாரம் ,திமுகவை காலி செய்து விடலாம் ,பிறகு தமிழகத்தில் ஆதிமுக வை ஒழிப்பது சுலபம் ,
தமிழகத்தில் ராஜாஜி இன வாரிசுகள் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது கணக்கு என பெரியவர் முடிக்கும் பொழுது எல்லாம் புரிந்து தலையை சுற்றியது .
அனால் ஊடகங்கள் என்ற பெயரில் ஆதிக்க சக்திகள் மீண்டும் நாட்டாண்மை செய்ய புறப்பட்டு விட்டது என்பது மட்டும் அனைவரும் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பது மட்டும் நிதர்சனம்.
ஞாயிறு, 8 மே, 2011
3g what happened
தற்பொழுது (தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் சமயம் முதல் ) உயிர் போகும் பிரச்சினையாக ஷ்பெக்ட்ரும் இதை விட சாமானிய மக்களுக்கு வேற பிரச்சினையே இல்லை என்பது போலவும் 7 % பார்வையாளர்களை கொண்ட ஆங்கில தொலை காட்சிகள் மக்களுக்கே புளித்து போக கூடிய அளவுக்கு அன்றாடம் மாவு அரைப்பது போல அரைத்துக் கொண்டிருக்கின்றன .
ஊழல் யார் செய்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுப்பட்ட கருத்துக்கள் இல்லை அதே சமயம் மந்திரி ஆ.ராசா ,மற்றும் திருமதி கனிமொழி க்கு மட்டும் காப்புரிமை உள்ளது போலவே சித்தரிப்பது என்ன நியாயம் ? திரு சுப்பிரமணிய சாமி யாருக்கு எவ்வளவு % என்று பெரிய பட்டியல் போட்டுள்ளார் அவர்களை இந்த வழக்கில் இணைக்க படவில்லை ஏன்? அவர் கூறியிருப்பது போல சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் போன்றோரும் இணைக்கபடவில்லையே ?அதை பற்றி ஆங்கில ஊடகங்கள் பேசுவதே இல்லையே ஏன் ?இடது சாரிகளும் இதை பற்றி வாய் திறப்பது இல்லையே ஏன் ?
சாதரண கிரிக்கெட் போட்டியில் கூட அணி தோர்த்தலோ ,நிதானமாக பந்து வீசினால் கூட அணி தலைவருக்கு பதில் சொல்லுகிறார் அல்லது அபராதம் விதிக்க படுகிறது அப்படி இருக்க பிரதமர் அமைச்சர் மீது கையை காட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ?
பிரதமர் ௨ ஜி மட்டுமில்லை அணைத்து வெளி வந்து கொண்டிருக்கும் அணைத்து ஊழல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் கூச்ச படாமல் பதவியே சுகம் என அமர்ந்து கொண்டிருப்பது வெட்ககேடானது ,வேதனை படக் கூடியது ,முன்னால் அமெரிக்க பிரதமர் புஷ் அவர்கள் உலக அளவில் உணவ பொருட்கள் விளைஎற்றத்திருக்கு இந்தியர்கள் அதிகமாக சத்தான உணவகளை சாப்பிட அரம்பித்ததுதான் காரணம் என்று கூறிய போது,பத்திரிக்கையாளர்கள் பிரதமரிடம் கருத்து கேட்ட போது இதற்க்கெல்லாம் பதில் சொல்லுவது என் வேலை இல்லை என்றார் ,ஒரு இந்திய நாட்டின் பிரதமர் ஒரு நாட்டையே கேவலபடுத்தி அடுத்த நாடு தலைவர் பேசும்போது அதை மறுத்து பதில் சொல்லாத பிரதமர் இவரை தவிர யாரும் இருக்க முடியாது இது எல்லா இந்தியரும் ஒன்று சேர்ந்து கண்டித்து இருக்க வேண்டும் ,சொல்ல வருவது இதை ஊடங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்க வேண்டும் செய்ய வில்லையே ஏன்?
கேட்பது இப்படி பட்ட பிரதமர் தேவையா ?
அதேப்போல் 3ஜி ஸ்பெக்ட்ரத்தை போல மூன்று மடங்கு ஊழல் நடந்தது ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது அது அப்படியே அடங்கி போனது ஏன்? கேட்டால் அதை இரத்து செயிது விட்டோம் என்று கூறுகிறார்கள் ,அப்படியானால் ஷ்பெக்ட்ரதையும் இரத்து செயிது இருக்குலமே? ஏன் செய்ய வில்லை ?என்ன காரணம் என்பதுதான் கேள்வி
3G எவ்வளவு பெரிய ஊழல் என்பது யாருக்கும் புரியவில்லைய ,இல்லை புரியாதது போல நடகிரரகளே ஏன்?யாரும் கேட்க மாட்டார்கள் ?வேதனை எல்லாம், இடது சாரிகள் மௌனம் காப்பது ஏன் என்று புரியவில்லை ?ஊடகங்களே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?புரிகிறதா உங்களுக்கு ?புரியும் !ஏன் புரியாது ?BLOOD IS THICKER THAN WATER அதானே ?
கனிமொழியிடம் சிஎநென் நிருபர் கேட்கிறார் உங்களை கைது செய்ய போகிறதா சொலுகிரர்களே என செயிய போகிறிர்கள் என்று கேட்கிரரர் அவர் சொல்லுகிறார் கோர்ட் அழைத்திருகிறது பார்ப்போம் என்கிறார் ஆனால் விடா பிடியாக நிருபர் கைது பற்றியே பேசுகிறார் இது எதை காட்டு கிறது அவரை கைது அவரை அவநம்பிக்கை கொள்ளசெய்ய வேண்டும் அல்லது மனுலைச்சளுக்கு ஆளாக வேண்டும் என்று திட்டமிட்டே கேட்கிறார் ,இதே கேள்வியை யாரிடமும் கேட்கமாட்டார்கள் ?
ஊடகங்கள் திட்டமிட்டே என நடக்க வேண்டும் என்று நினைகிரர்களோ ?அதையே செய்தியாகுகிரர்கள் ,ஆங்கில ஊடகங்கள் யாருக்கு சொந்த மானது என்று பார்க்க வேண்டும் ,செய்தியில் எந்தாளவுக்கு உண்மை என்பதை ஆய்வு செய்யுது நம்ப வேண்டும்
முடிவாக இதே போல் ப ஜ க ஆட்சியுளும் ப்ரோமொதன் மகாஜன் மீதும் தணிகை அறிக்கை எதிராக வெளியானது அப்போது இது போல கைது செய்ய வில்லையே ஏன் ?
சென்ற ஆட்சியில் அன்புமணி மீது கணையை வீசினார்கள் இப்போது ராசா ஆகா தமிழர்கள் அதுவும் திராவிடர்கள் தவிர யாரும் தவறு செய்ய விலையா? யோசிப்பிர் தமிழர்களே ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)