புதன், 25 மே, 2011

alli raani durbaar , ALI RANI DURBAR or TUQLUK

தமிழகத்தில் அல்லி ராணி ஆட்சியா (அ) துக்ளக் ?ஆட்சியா ? மக்கள் ஆட்சி மட்டும்  நடக்க வில்லை என்பது மட்டும் திண்ணம் ! ஏனெனில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் கட்டிய  இராணுவம் சொந்தம் கொண்டாடும் ஜார்ஜ் கோடையில் அடிமை கால ஆட்சி  மற்றும் இட  நெருக்கடி  என காரணம் சொல்லி குஈன் மாரிஸ் மகளிர் கல்லூரியை சட்ட சபை மற்றும் தலைமை செயலகமாக  கட்டம் கட்ட  திட்டம் போட்டு போராட்டம் எல்லாம் நடந்து ஸ்டாலின் கைது அளவுக்கு சென்றது ஜெ வின் கடந்த ஆட்சி காலத்தின் வரலாறு .அனால் இன்று எல்லாமே ,சரித்திரம் மாறுகிறது  ,சென்ற ஆட்சி ஜெ வின் செயல்பாடுகள் துக்ளக் வேண்ட பட்டவரோ என்னவோ ,இன்றைக்கு கலைஞர்  ஆட்சி காலத்தில் பார்த்து பார்த்து  கட்டியது  என்ற காரணத்தினால் புதிய தலைமை செயலகம் வேண்டாம் ,மேலவை வேண்டாம் ,சமசீர் கல்வி கொண்டுவர வேண்டும்  என்று பல்வேறு போரட்டத்திற்கு பலனாக கலைஞர் ஆட்சி தீவிரமாக பரிசிலித்து சமசீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு அமுல் என்று அறிவித்து  அனைத்து பணிகளும் முடிந்து ,ஜூன் ஆம் தேதி ஆரம்பமாக  வேண்டிய காலத்தில் இப்போது இல்லை என அறிவித்து  பிற்படுத்தப்பட்ட ,ஏழை பாழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வி  மறுப்பது மக்களின் வரிப்பணம் வீணடிப்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லி ராணியின் அட்டகாசம்,   அரசு பணம் என்பது மக்களின் வேர்வை  இரத்தம்  அதை வீணடிப்பது என்பது காடேரி இரத்தம் குடிபதற்கு சமமம்,அவர்க்கு  கருணாநிதி பிடிக்காது என்பதற்காக செய்வது !அப்படி என்றால் கருணாநிதி தமிழகத்தில் தான் இருக்கிறார் என்பதற்காக இவர் தமிழகத்தை விட்டுவிட்டு ஓடிவிடுவரா ? இவளவு செய்பவர் அதையும் செய்ய வேண்டியது தானே ? 

                                         அனைவரும் ஒருமித்து  போராடவேண்டும் இல்லை என்றால் அவர் குடுக்க இருக்கிற ஆடு மாடு மேய்க்க  அனுப்பவேண்டியதான் ?  
முடிவு செய்ய வேண்டியது  மக்கள்தான் .


                "நெற்றிக்கண்  திறப்பினும் ,குற்றம் குற்றமே ".       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக