வெள்ளி, 13 மே, 2011

aiadmk victory ,curse or boon

அன்பான தமிழக வாக்கள பெருமக்கள் பெரும்  எதிர் பார்ப்போடு ஆதிமுக அணியை வெற்றி பெற செய்திருக்கிறார்கள் ,அந்த எதிர் பார்ப்பு நிறைவேற்ற படுமா ? நிறைவேற்ற வேண்டும் !நிறை வேறும் என்று  நம்பிக்கை கொள்வோம் ,நம்பிக்கைதான் வாழ்கை ,நிற்க திமுக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டது ,இலங்கையில் காங்கிரசோடு சேர்ந்துகொண்டு இன துரோகம் இழைத்து விட்டது ,ஆகவே திமுக ஆட்சியை விட்டு துரத்த பட வேண்டும் என்று கூறி நாயை விட கேவலமாக  ஆட்சியை விட்டு  தூக்கி எரிய பட்டு விட்டார்கள்  இனியேனும் இலங்கை தமிழர் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்குமா ? கருணாநிதி பாவியாகி துரோகியாக்கி   அடுத்த ஐயுந்து ஆண்டுக்கு தமிழகத்த பொறுத்தவரை அதிகாரத்தை பொறுத்தவரை கருணாநிதி செல்லாக்காசு!

 இனியேனும் இலங்கை தமிழர்களின் நல்வாழுவுக்ககவே அவதரித்துள்ள சீமான்களும் ,தா.பா களும், நெடுமாறன்களும்,பணநாயகத்தை ஒழித்துவிட்ட  வைகோ களும் ,சேர்ந்து தனி ஈழம் பெற்று தந்து விடுவார்கள் ,எனவே அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளை கூறிவிடுவோம் .

அனால் ஒன்று இப்போது தெரிந்து விடும் அவர்களின் சுயரூபம் ,உண்மையான நிலவரம் என்ன என்பதும் நாட்டுமக்களுக்கு தெரிந்து விடும் .

ஆனால் ஒரு உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,விவேகமும் ,ராஜதந்திரமும் இல்லாமல் வெரும் வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அலெக்ஸாண்டர் ஆனாலும் சரி நெப்போலியன் ஆனாலும் சரி வெற்றி பெறமுடியாது .

                             முள்ளி வாய்க்கால் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக் கொலையே நடுங்குகிறது தனி ஈழம் யாருக்காக? தமிழர் களுக்காக என்று கூறிவிட்டு லட்ச கணக்கான மக்களை இழந்து விட்டு ,இழந்துகொண்டு எண்ணத்தை சாதிக்க போகிறார்கள் இந்த தமிழக வாய்ச்சொல் விரரர்கள்,இந்த வாய்ச்சொல் வீரர்கள் மட்டும் மாவீரன் வரலாற்று நாயகன் பிரபாகரன் அவர்களிடம் அப்போதைய  இந்திய  பொது தேர்தல் முடிவுகள் எப்படிருக்கும் என்று கணித்து உண்மையை விளக்கி இருந்தால் ,விவேகமான ராஜதந்திரமான முடிவை கண்டிப்பாக எடுத்திருப்பார் ,லட்ச கணக்கான  தமிழர்களின் உயிர்கள் பாது காக்க பட்டிருக்கும்.ஆனால் தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் கருணாநிதி பெயரை கெடுக்க வேண்டும் ,தாங்கள் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்கள் ஆகவேண்டுமேன்பதர்க்காக தாய் தமிழர்களின் உணர்சிகளை தங்களின் உயர்வுக்கு உரமாக்கி கொண்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை சாதிவெறி பிடித்த கம்யுனிச தலைவர் என்று கூறிக்கொண்டு தா.பா  செயல் படுவுது கண்டிக்க படவேண்டிய ஒன்று ,

       விடுதலை புலிகள் வேண்டுமென்றால் இந்த தமிழக காகித புலிகளை மன்னிக்கலாம் ஆனால் முள்ளி வாய்க்கால் ஆவிகள் இவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிக்கவே மன்னிக்காது ,இந்த காகித புலிகளின் முகத்திரை இன்று இவர்களின் பின்னால் இருக்கும் ஆதிக்க சக்திகள் கருணாநிதி மீது பழி போட்டு தப்பித்து இருக்கலாம் ஆனாலும் இவர்களின் முகத்திரை கிழிபட்டே தீரும் .
  
                                      ஐயா காகித புலிகளே உங்களின் தமிழன துரோகம் இலங்கையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் தாய் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்சாதி ,பிராமண ஓநாய்களிடம்  உங்கள் சுய நலத்திற்காக அடகு வைத்து விடாதிர்கள் .

                       " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "

                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக