"தேசம் அண்டே மட்டி காது மனுஷுலே " என்று மக்கள் போராளி என்று ஆந்திராவில் அழைக்கப்பட்ட அல்லுரி சீத்தா ராமராஜு முழங்கிய முழக்கம் ஒட்டு மொத்த ஆந்திர மாநிலம் முழக்க ஒன்றிணைத்த முழக்கம் ,அது "தேசம் என்றால் வெறும் மண் இல்லை ,மக்களே " என்பது அதன் அர்த்தம் அது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் என்பதை கோர சண்டாளன் மக்க போகும் ராஜபக்ஷேவின் செய்கைகள் உணர்த்துகிறது அவனை பொறுத்தவரை "ஈழம்"என்பது வெறும் மண் மனிதர்கள் அல்ல என்பதை" இசை ப்ரியாவின் " கொடுமையான மரணம் மூலம் நிருபித்து இருக்கிறான் ,ராஜீவ் காந்தி மரணம் என்பது கொடுமையானது என்பது மனிதர்கள் யாரும் மறுக்கவில்லை அதற்காக ஒட்டு மொத்த ஈழ தமிழர்களையும் அழிப்பதற்கு துணை போகும் இந்தியாவின் அதிகார வர்கத்திருக்கு என்னை அரித்து கொண்டே இருக்கும் ஒரே கேள்வி இந்தியாவை உலக அளவில் கொண்டு சென்ற "அன்னை இந்திரா காந்தியை "அவரின் வீட்டில் வைத்தே கொன்ற சீக்கிய மக்கள் அனைவரையும் இப்படியா கொன்று குவித்தது இந்தியா ,அந்த இனத்தை சார்ந்த இன்றைக்கு இலங்கை செல்வேன் என்று அடம்பிடிக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமராக வித்து அழகு தானே பார்த்து கொண்டிருக்கிறோம் அதையாவது சிந்தித்து பார்த்து அந்த டர்பன் வீரர் முடிவெடுத்து இருக்கவேண்டியவர் இப்படி திருவிழாவிருக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தை போல் முடிவெடுப்பது வெக்க கேடான விஷயம் மனிதாபிமான அற்ற ஒரு ரோபோ என்றே சொல்ல தோன்றுகிறது !இலங்கையில் காட்டும் வீரத்தை அதிகார வர்க்கம் பஞ்சாபில் காட்ட முயன்றால் அதன் விளைவுகள் எப்படியுருக்கும் என்று தெரியும் ஆனால் தமிழன் என்றால் மாட்டும் பொத்துகிட்டு வருது "உணர்ச்சிகள் ", உணர்ச்சிகள் என்பது எல்லா மனித ராசிகளுக்கும் ரத்தத்தில் கலந்திருப்பது வெடிக்கும்போது சரியான படிப்பினை கற்க போவது நிச்சயம் அதற்க்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு !பஞ்சாபை இங்கே ஒப்பிடுவது அங்க காட்டும் மனதாபிமானம் தமிழனக்கும் காண்பிக்கவேண்டும் என்பதற்காக மட்டும்தானே வேறில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக