வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அண்மையில் நடை பெற்ற அனைத்து சாதி சங்கங்களின் கூட்டத்தில்  திரு ,ராசமாணிக்கம் தலைமையிலான தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கலந்து கொண்டது .இந்த கூட்டம் சென்னையில் டாக்டர் ,இராமதாஸ்  தலைமையில் நடைபெற்றது .

புதன், 29 ஆகஸ்ட், 2012


களப்பிரர் காலம் என்பவர்களின் கவனத்திற்கு....
திருச்சி செல்வேந்திரன் கட்டுரை
 
தினமணி தன் திருந்தாத தெருவாயை மீண்டும் திறதிருக்கிறது.  அதனுடைய ஆசிரியராக இருக்கின்ற பேர்வழி, பச்சை ஜாதி வெறிகொண்ட சனாதனவாதி என்பது உலகறிந்த  ரகசியம்.  எந்த விழாவானாலும் அங்கே போய் திராவிட இயக்க எதிர்ப்பையும், கலைஞர் எதிர்பார்பையும் காட்டி தங்கள் பாரம்பரிய அரிப்பைப் பலரறியச்சொறிந்து கொள்வது பழக்கம்.

திருமுறை ஆருட்பணிகளைப் பற்றிப்பேச நடந்த விழா ஒன்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம்  என்று சொல்வதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு அதைவிட உண்மையான களப்பிரர் காலம் இருபதாம் நூற்றாண்டுதான் என்று பேசியிருக்கிறார்.

அரசு விழாக்கள், பொது விழாக்கள் எதுவானாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடுவது என்று கலைஞர் ஆட்சிக்காலம் துவக்கி வைத்த ஓர் ஒழுக்க நெறியை, இப்போது சிலர் கடவுள் வாழ்த்துப்பாடி விழா வைத்துவக்குகிறோம் என்ற பெயரால் தமிழ்த்தாய் வாழ்த்தை மெல்ல ஒழிக்கத்து வங்கியிருக் கிறார்கள்.   மேற்படி விழாவிலும் அது நடந்திருக்கிறது.  ‘’கடவுள் வாழ்த்துப்பாடி இந்த நிகழ்ச்சியைத் துவங்குவதன் மூலம் களப்பிரர் காலம் முடிந்துவிட்டது என்று பொருள்’’ என மேற்படி ஆசாமியும் பேசியிருக்கிறார்.
களப்பிரர் காலம் என்பது பொதுவாகப் பார்ப்பன சனாதன தர்மக் கொள்கைகளுக்கு எதிராய் மனிதநேயக் கொள்கைகளைக் கொண்டிருந்த பௌத்த - சமண சார்பான அரசாக இருந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்தை மயிலை சீனிவெங்கடசாமி போன்ற வரலாற்றறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்திலேதான் இன்றைக்குத் தமிழினுடைய தொன்மையை நாம்போற்றி செம்மொழி தகுதி பெறுவதற்குரிய சிலப்பதிகாரம் போன்ற பெருமைக்குரிய இலக்கியங்களெல்லாம் உருவாகியிருந்தன.  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றெனப்போற்றப்படுகின்ற மணிமேகலையும் இந்தக் காலத்திற்குரியதுதான் என்கிறார்கள்.   மேலும், அந்தக்காலத்தில் உருவான தமிழ் இசை - நாடக மருத்துவ நுட்பங்களை விளக்குகின்ற நூல்கள் பல பின்னர் அழிக்கப்பட்டுவிட்டன என்றும்,  சில பகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.  ஆனால், அந்த காலத்தை  இருண்ட காலம் என்று சிலர் சொல்லித்திரிகிறார்கள்.  
அவர்கள் சொல்லுகின்ற நவீன களப்பிரர் காலத்திலேதான் தீவிர சமய அன்பர்களான ஓமந்தூர் ராமசாமி போன்றவர்கள் ஆட்சித்தலைவர்களாக இருந்தார்கள்.  இறைப்பற்று உள்ள அவர்கள்தாம், கோவில் குருக்களே சாமியின் நகைகளை விலைமாதர்கள் கழுத்திலே கொண்டு போய் சூட்டி அழகு பார்த்ததையும் அடகு வைத்ததையும் பின்பு அதையும் விற்று தின்றுவிட்டு அரோகரா போட்டதையும் கண்டுபிடித்து சட்டமன்றத்திலேயே பேசினார்கள்.  அதைத்தடுக்க ஏற்கனவே இருந்த அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இன்னமும் செப்பம் செய்தார்கள்.  இல்லையென்றால் கோவில் நகைகளையும் சொத்துக்களையும் மட்டுமல்ல,  கோவிலையே குருக்களும் - போலி பக்தர்களும் சேர்ந்து குடோனுக்காக வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
இராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித்திட்டத்தை ஒழித்து சூத்திரனுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட குருகுலக் கல்வி இருந்த நாட்டில் எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பது அரசின் திட்டமானது, தினமணியில் கட்டுரை எழுதின ஆட்கள் சொல்கிற இதே களப்பிரர் ஆட்சியிலேட்தான்.
இன்றைக்கு யோக்கியர்களைப் போல் பக்தியில்லை என்றால் தமிழ் இல்லை, தமிழ் இல்லையென்றால் பக்தி இல்லை, இதைக்கெடுத்தது திமுககாரர்கள்தான் என்று மறைமுகமாகப் பேசும் இதே ஜென்மங்கள்தாம் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கே போய் தடையாணை பெற்றிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் மறந்து போயிருக்கும் என்று நினைக்கிறார்கள்.
அந்த மேடையில் அவர் பேசுகிறபோது நான் மறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் ஒன்றென்று பொருள் படும்படிப் பேசியிருக்கிறார்.  நெற்றி நிறையத் திருநீற்றோடு மேடையில் வீற்றிருந்த சைவ மெய்யன்பர்களும் அது குறித்து மறுப்பேதும் சொல்லாமல் தங்கள் திருவாயில் திருநீற்றைக்கொட்டி மூடிக்கொண்டு திருச்சிற்றம்பலமே என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.    சைவசமய நெறியும் - நான்கு வேத நெறியும் ஒன்றென நம்புகிறவன் முட்டாள். பேசுகிறவன் அயோக்கியன்.   
நவீன களப்பிரர்கள் என்று அவரால் மறைமுகமாக அழைக்கப்படும் திராவிட இயக்கத்தார், சமயம் இல்லையென்றும் நெறிகள் இல்லையென்றும் இறைவனே இல்லையென்றும் பொய்ப்பிரச்சாரத்தைச் செய்தவர்கள் என்றும் பேசியிருக்கிறார்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் எது உண்மை சமயம், எது உண்மை நெறி, எது உண்மைக்கடவுள் என்பதைப்பற்றி சைவ, வைணவ,வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் நடக்கின்ற விவாதத்தை, அடிதடியை சில சமயங்களில் போரைப்பற்றிய வரலாறு தெரியாத தற்குறிகள்தாம் திராவிட இயக்கத்தாரைக் குற்றம் சொல்வார்கள்.
தமிழகத்தில் இருந்த வைணவக் கோவில்களையெல்லாம் சைவக்கோயில்களாக மாற்றுவதற்கு சமர் தொடுத்தவர்கள் யார்? கோவிலிலிருந்த திருமால் சிலைகளையெல்லாம் கிணறுகளிலேயும் ஏரிகளிலே யும் தூக்கி வீசியவர்கள் யார்? வைணவ சமயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மாபெரும் புரட்சிக் காரன் என்று போற்றப்படுகின்றவரும் வைணவர்களால் கடவுளாகவே கொண்டாடப்படுகின்றவருமான இராமனுஜரை ஊருக்குள்ளே நுழைய விடாமல் கடிதோய்ச்சி விரட்டியவர்கள் யார்? சைவ மெய்யன்பர்கள் தாமே!  திராவிட இயக்கத்துக்காரனா?
கோவிலாவதேதடா குளங்களாவதேதடா என்று பாடினவனும் நட்ட கல்லைத்தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தும் மூடர்களே என்று சிலை வணக்கத்தைச் சாடியவனும் நாத்திகன் அல்ல.  பக்தன்,சித்தன் காலங்களல் அழியாமல் காற்றோடு உலவுகிறார்கள் என்று போற்றப்படுகின்ற சித்தன்.
சாமி சிலைகளுக்கு பூசை செய்கிற குருக்களை பிறப்பால் பிராமணனானாலும் செய்யும் தொழிலாலும் நம்பிக்கையாலும் அவன் இழிஜாதி என்று ஒதுக்கி வைத்திருக்கிறவர்கள், தினமணி வைத்தியின் சொந்தக்காரர்களா? திராவிட இயக்கத்தின் தலைவர்களா?
பக்தி நெறி என்பது அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம் என்பதுதான் தலைவர் கலைஞர் போன்றவர்களின் கருத்து.  ஆனால் பிற சமயத்தைச் சேர்ந்தவர்களை வெறுக்கவும் எதிர்க்கவும் ஒழிக்கவுமான நிலைகள் பக்தர்களால் பக்தர்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொள்வதேயன்றி நாத்திகர்கள் ஏற்படுத்தியதல்ல.
ஒரே வைணவ சமயத்தின் வடகலைப் பிரிவைச்சேர்ந்தவர்களும் தென்கலைப் பிரிவைச்சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டு இரத்தக் காயங்களுக்கு ஆளாகி நூறாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து இலண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்றதற்குக்காரணம் திமுக ஆட்சியா?
திருக்குறள் உலகப்பொதுமறை என்பது கிறிஸ்துவர்களாலும் கூடப் போற்றப்படுகின்ற ஓர் அரிய நூல்.  ஆனாலும் அது சமண, சமயக்கருத்துக்களை உள்ளீடாகக்கொண்டிருக்கிறது என்ற ஒரு தவறான கருத்து தமிழ்க்கடல் என்று பழங்காலத்தில் பாராட்டப்பட்ட சைவை சமய அன்பரான திருச்சிராபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்தது. 

அதனால் அவர் திருக்குறளைத் தன் மாணவர்களுக்குப் பாடமாக சொல்லித்தரமாட்டாராம்.  இவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களினுடைய ஆசிரியராவார்.   திருக்குறளைப்போன்ற ஓர் அற்புதமான நூலை மகா வித்துவான் ஒதுக்கியதற்கு காரணம் திராவிட இயக்கமல்ல, அவரது சைவ சமயப் பற்றே!
மிகப் புகழ்பெற்ற தமிழிசைக்கலைஞர் மதுரை சோமந்தரம், அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்து  அமைச்சர் ஒருவரால் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.  நெற்றி நிறைய திருநீற்றோடு  கடும் சைவ அன்பரான  சோமு, திருவரங்கம் பெரிய கோவிலுக்குள் வருவதையும் சைவக்கடளைப் போற்றும் பாடல்களை பாடக்கூடாதென்றும் வைணவ அடியார்கள் எதிர்த்தார்கள்.  அமைச்சரின் வேண்டுகோளின்படி வைணவர்களினுடைய சம்பிராதயப்படியான நெற்றியில் கோபி சந்தனம் அணிந்து தொடக்கம் முதல் இறுதிவரை திருமாலைப்பற்றி மட்டுமே பாடிவிட்டு சோமு வெளியே வரவேண்டியிருந்தது. இது கதையல்ல, நடந்த சம்பவம்.  நேரில் கண்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
இதற்கு மேல் சைவ, வைணவச்சண்டையை, யார் கடவுள் உயர்ந்தவர் என்ற சண்டையை இலக்கியத்தின் மூலமாகத் தெரிந்துகொள்வதற்கு  விரும்பினால் கவிகாளமேகத்துடைய தனிப்பாடல்களை மாத்திரம் படித்தால் போதும்!
தமிழை ஆட்சி மொழியாக்கி - தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்த வள்ளுவனுக்குக் கோட்டம் அமைத்து- சிலயெடுத்து  சிறப்பு செய்து தமிழைச்செம்மொழியாக உயர்த்திய அண்ணாவின்,  கலைஞரின்  காலத்தை களப்பிரர் காலம் போல இருண்ட காலம் என்று சொல்கிறவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உரியவர்கள்.

நன்றி : முரசொலி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

https://www.facebook.com/photo.php?fbid=321689034594078&set=o.345858932098247&type=1&relevant_count=1&ref=nf

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012


திருச்சி அருகே இன்று முத்தரையர் சிலை அவமதிப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு
 
திருச்சி அருகே இன்று முத்தரையர் சிலை அவமதிப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு
தொட்டியம், ஆக. 14-
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்.புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு இன்று அதிகாலையில் யாரோ `மர்ம' நபர்கள் செருப்பு மாலையை அணி வித்து அவமதித்து சென்று உள்ளனர்.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் ஊருக்குள் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து சிலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்கள் முத்தரையர் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர். தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

செவ்வாய், 31 ஜூலை, 2012

களப்பிரர் என்னும் கலி அரசர்

Part 2

களப்பிரர், கன்னடர்கள் என்பதற்கு கூட முடிந்த முடிபான வரலாற்று சான்றுகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் படு நிச்சயமாக சொல்லலாம் அது அவர்கள் மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள். 325 ஆண்டுகள் தமிழகத்தின் மூவேந்தர்களையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள். இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. களப்பிரர் ஆட்சி செய்த 325 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.

தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு. 1700 – கி.மு. 1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. தமிழகத்திலிருந்த மூவேந்தர்களும் ஏன், எப்படி எதற்கு என்று எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆடம்பர ஆட்டங்களுக்கும், யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்தார்கள். மூவேந்தர்கள் தங்களோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள். தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிரத மயமாக்கப்பட்டன. ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.

தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. இதற்கு உதாரணம், சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருகுறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே. இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருகுறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது. இதைதான் ‘ஊரான் வுட்டு நெய்யே எந் பொண்டாட்டி கையே’ என்பார்கள். இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் அசுவமேத யாகத்திலும், வாஜபேய யாகத்திலும், புத்திரகாமேஷ்டி யாகத்திலும் மூழ்கி கிடந்தார்கள். தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்துவிடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.

மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள். பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் ஆட்சியதிகாரமும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன. உழைக்காமல் நோன்பு கும்மிடுவதற்கும், உழைப்பவர்ளை ஆதிக்கம் செய்வதற்கும் உண்டான அனைத்து வேலைகளையும் செய்ய பிராமணியம் தவறியது கிடையாது. இங்கே பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன என்று பார்க்கவேண்டி இருக்கிறது.

பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். இந்த ஊர்களை சதுர்வேதி மங்களங்கள் என்றும் பிரம்மதேயங்கள் என்று அழைப்பார்கள். இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசுலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.

எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்த விரட்டியடிப்பு கி.பி. 150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது. தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

பார்ப்பனியத்தின் பக்கமும், பிராமணர்கள் பக்கமும் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன. பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்தக்கொள்ளபட்டன. பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி ஒரத்தில் உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது. களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

ஒரு நாகரிகத்தின் இருண்ட காலம் என்று வரையறுக்கப்படுவது எது என்று இந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். ஆனால் நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள். அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபும்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.

சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (சினிமா புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர். போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர். இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.

களப்பிரரை பற்றி முதன் முதலில் இந்த உலகிற்கு அறிவித்த வேள்விக்குடி செப்படு கூட கொற்கைகிழான் தற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு உரிமையாக கொடுக்கப்பட்ட வேள்விக்குடி என்னும் ஊரை பிடுங்கிகொண்ட கயவர்களாகவே களப்பிரரை அறிமுகப்படுத்துகின்றது. தன் பிறப்பை பெரிது படுத்தி உடல் உழைப்பு இல்லாமல், பிறரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது மட்டும் கயமைத்தனம் கிடையாதோ!

உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் எழுதுகோல் தருமம். தாங்கள் எழுத புகும் வரலாற்று நிகழ்வுகளில் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது இவர்களின் தலையாய வரலாற்று கடமை. ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களுக்கு இப்பிறவின் புண்ணியத்தை தேடித்தரும் செயல்கள். இவர்களுக்கு மத்தியில் பாகுபாடு அற்ற உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் நடுநிலையான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் இருப்பது ஒன்றே உண்மை இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 325 வருடங்கள் கழித்து கி.பி. 575-ல் முடிவிற்கு வந்தது. தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். ஆரிய பார்ப்பனியம் மீண்டும் ஆதிக்க சிம்மாசனம் ஏறியது ‘பழைய குருடிகள் கதவை திறந்தார்கள்’. பிடுங்கபட்ட பிராமண உரிமைகள் மீண்டும் அவர்களின் திறந்திருந்த வாயிக்குள் வந்து விழுந்தன. பிராமணர்களின் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்ததும் தமிழகத்தின் இருண்ட காலம் முடிந்தது!

ஆதிக்க வர்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், எல்லாருக்கும் எல்லாம், தமிழ் இலக்கிய வளர்ச்சி, மத சார்பற்றத் தன்மை இவை போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா அல்லது ஆதிக்க வர்கத்திற்க்கு எதிரான புரட்சி குரலா என்று தீர்மானிப்பது இந்த கட்டுரையை வாசிப்பவரின் கைகளிலேயே இருக்கிறது.








வெள்ளி, 27 ஜூலை, 2012

திருச்சியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள், மருமகன்கள் கைது: பதட்டம்
Posted by: Vadivel
Rajini, Kamal together on screen a...

SHARE THIS STORY

0

Ads by Google
Looking for a new Mobile? www.Saholic.com/Best-Deals
Check out these Burning Hot Deals. Original Mobiles with 1Yr. Warranty
திருச்சி: தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் விஸ்வநாதன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஸ்வநாதன் கைது செய்யப்பட்டதால் திருச்சியில் பதட்டமாக உள்ளது. இதையடுத்து திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரகளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது
கருத்துகள்பதிவு செய்த நேரம்:2012-07-27 10:49:50
திருச்சி, : வீரமுத்தரையர் பேரவை பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள் மற்றும் மருமகன்கள் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த லால்குடி பகுதி வாலிபர்கள் ராஜேஷ் (27), தினேஷ் (27), விஜயகுமார் (29), சந்திரமோகன் (27), பிரவின்ராஜ் (23), சரவணன் (20) ஆகிய 6 பேர் நேற்று மாலையில் வரகனேரியில் உள்ள சங்க தலைவர் விஸ்வநாதன் அலுவலகத்திற்கு காரில் வந்தனர். 
அப்பகுதியில் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் மயில்சாமி 6 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தார்.
வாலிபர் வீடு சூறையாடி கொலை மிரட்டல்: முத்தரையர் சங்கத்தலைவர் மகன்களுடன் கைது Tiruchirappalli வியாழக்கிழமை, ஜூலை 26, 1:34 PM IST 0கருத்துக்கள்0 இமெயில் பிரதி


திருச்சி, ஜுலை. 26-

திருச்சி வீர முத்தரையர் சங்க நிறுவன தலைவர் செல்வகுமார். திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 12.3.2012 அன்று செல்வகுமார் மண்ணச்சநல்லூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்பினர் செல்வகுமாரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி செல்வகுமார் கோவிலுக்குள் சென்றார். கடந்த 24.3.2012 அன்று பெரிய கொத்தமங்கலத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அங்கு அவரது வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களையும் சூறையாடியது. அவரது மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனை தடுத்த செல்வகுமாரை முத்தரையர் சிலைக்கு இனி மாலை போடக்கூடாது, மீறினால் சுந்தர் நகர் மாணிக்கத்தை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டிவிட்டு சென்றது.

செல்வகுமார் தமிழக முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்டு போலீஸ் உதவி கமிஷனர் காந்தி, எடமலைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகிய 5 பேர் மீதும் செல்வகுமார் வீட்டை சூறையாடுதல் (427), கொலை மிரட்டல் (506) விடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆர்.விசுவநாதன் வீட்டிற்கு போலீஸ் படை சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவரது மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முத்தரையர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். முத்தரையர் சங்க நிறுவன தலைவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்

தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க திருச்சி ஜே.எம். 2 கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை சிலர் அடித்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செல்வகுமார் எடமலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். 

செல்வகுமாரின் புகாரை ஏற்று தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‌போலீசார் எதற்காக, எந்த வழக்குக்காக கைது செய்தனர் என்ற விபரமே தனக்கு தெரியாது என்று கூறினார். இதனிடையே விஸ்வநாதன் கைதால், திருச்சி புறநகரில் சிறிது பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Caste outfit leader, kin held on vandalism charge

STAFF REPORTER
SHARE · PRINT · T+
Share
1

Tamil Nadu Mutharaiyar Sangam president R. Viswanathan (first from left), being taken by police in Tiruchi on Thursday.— PHOTO: R.M. RAJARATHINAM
The leader of the Tamil Nadu Mutharaiyar Sangam R. Viswanathan, his two sons and two sons-in-law were arrested on Thursday on a complaint by the leader of the Veera Mutharaiyar Peravai, Selvakumar, alleging they had ransacked his residence at Periya Kothamangalam and threatened to eliminate him owing to previous enmity.

They were reportedly taken for questioning early in the day and detained in an Armed Reserve community hall at K.K. Nagar here for a few hours.

The city police deployed a large number of personnel at the spot to prevent their supporters from assembling.

Mr. Viswanathan, his sons, Ramprabu and Balamurugan, and sons-in-law Ravishankar and Dharmaraj, were charged under IPC Sections 147 (unlawful assembly), 148 (rioting with deadly weapons), 307 (attempt to murder), 427 (causing damage to the amount of Rs. 50 or upwards), and 506 (ii) under Tamil Nadu Property (Prevention of Damage and Loss) Act.

They were subsequently brought to the district court under tight security and produced before Judicial Magistrate II Rajendran who remanded them in judicial custody.

In May, a group of Tamil Nadu Mutharaiyar Sangam members were arrested for indulging in vandalism at the Gandhi Market and in Fort Station limits while taking out an unauthorised procession — the outfit was permitted only to garland a statue of Perumpidugu Mutharaiyar in connection with ‘Sandhaya Vizha’.

They were arrested for destroying windowpanes of four buses, attacking passers-by, and attacking a police inspector.

Mr. Viswanathan, who is also an accused in the case, had secured bail.
 ·  ·  · 7 hours ago
TN: Caste outfit leader held for assault
The New Indian Express | 27-Jul 12:36 PM
Tiruchy: The president of Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam, a caste outfit, was arrested along with his sons and sons-in-law on Thursday for allegedly assaulting a man belonging to a rival outift following a rift. Police said on March 12, the members of the Mutharaiyar Sangam, under the instructions of their president R Viswanathan (65), barged into the house of the founder president of Veera Mutharaiyar, K Selvakumar (40), and ransacked his house. They also assaulted him and threatened him with dire consequences.
It is said that Viswanathans henchmen warned Selvakumar to dissolve the outfit, which was akin to their Sangam. Subsequently, Selvakumar lodged a complaint with E-Pudhur Police and a case was registered. There was a prolonged rivalry between the members of both the outfits and they indulged in frequent clashes. As both outfits belonged to the same community, they were very particular on celebrating their caste festivals.
It is said that Veera Mutharaiyar Sangam members had been gaining popularity by organising a series of celebrations for the Mutharaiyars, which apparently did not go down well the Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam. Based on the complaint, police arrested Viswanathan, his sons Ramprabhu (32) and Balamurugan (28), his sons-in-law R Ravi Sankar (38) and M Dharmaraj (37), early on Thursday.
Following interrogation, they were produced before the Judicial Magistrate Court II and Judge Rajendran remanded all the five in judicial custody till August 9. They were then lodged in the central prison. A posse of policemen was deputed at the Court and across the city




முத்தரையர்

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.

சனி, 9 ஜூன், 2012

நம் மன்னரின் சதய விழாவின் போது கைது செய்யப்பட்ட நமது உறவுகள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர் ,சிறையில் வாடிய நமது உறவுகளின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் கவனித்து கொண்டது அதேபோல் ஐயா திரு ஆர்.வி அவர்கள் நமது உறவுகள் அனைவரையும் சிரியல் சந்தித்து ஆறுதலும் கூறினார் ,திரு ஆர்,வி பரதன் அவர்கள் உணவு உடை அனைத்தும் வழங்கி உறவுகளக்கு வசதிகள் செய்து கொடுத்தார் அவர்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 
தமிழ் நாடு முத்தரையர் சங்கம் தலைவர் திரு ,குழ ,செல்லையா ,மற்றும் முன்னாள் நாடாள மன்ற உறுப்பினர் திரு ,ராஜ பரமசிவம் அதிமுக வில் ஐக்கியம் ,இதில் வேடிக்கை ஒரு சமுக தலைவர் அரசியல் கட்சியில் சேரும் முன்னர் சங்க தலைவர் பதவி ராஜினாமா செய்திருக்க வேண்டும் அவ்வாறு செய்தது சரியான முன் உதாரணம் ஆகாது ,அவர் உடனடியாக சங்க தலைவர் பதவி விட்டு விலக வேண்டும் ,அதே போல் சங்க தேர்தலை முறைப்படி நடத்தி ஒரு சரியான தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும் ,இது அவசரம் ,அவசியம் .

சனி, 2 ஜூன், 2012

www.mutharaiyar.org website launched on 23 rd may 2012 at trichy at aiyya thiru R,V,office permisess            


நண்பர்களே ,சற்று நிதானமாக சிந்தித்து பார்க்க உங்கள் முன் சில உண்மைகளை வைக்க கடமை பட்டிருக்கிறேன் இது அரசியல் அல்ல ஆதங்கம் ,உண்மை நம்மின் யாமாளி தனம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கான உதாரணம் ,இன்றைய தினத்தந்தி நாளிதிழில் தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்த்பட்டோர் மற்றும் சிறுப்பான்மைனர் நலத்துறை ஓராண்டு சாதனையாக தமுக்கம் போட்டுரிக்கிறது அதில் பிற்படுத்தப்பட்டோர் சார்பாக கள்ளர் ,பிரமலை கள்ளர் போன்ற வகுப்பினருக்கு தமிழக அரசு செய்துள்ள சாதனைகளை பெருமையுடன் பறை சாற்றியுருக்கிறது ,அதேபோல் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிற சாதனை மட்டுமே முழு பக விளம்பரமாக வந்திருக்கிறது ,நாங்கள் கேட்பதெல்லாம் நடப்பது நம்ம ஆட்சி நடப்பது நம்ம ஆட்சி என்று பெருமை பட்டுகொல்கிரோமே அது சரியா என்பது தான் பிற்படதப்ப்பட்டோர் என்றால் வெறும் கள்ளர் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் தானா ,காலம் காலமாக அதிமுகவின் வாக்கு வங்கியாக ,நம்வீட்டு குழந்தையை போல் வளர்த்து விட்டோமே " முத்தரையர் " இனம் அந்த இனத்திற்கு இந்த அரசு என்ன செய்ததது என்று ஒரே ஒரு வரி கூட இந்த முழு பக்க விளம்பரத்தில் குறிப்பிட முடிய வில்லை ஆனால் நடப்பது நம்ம ஆட்சி ஒட்டு மொத்த முத்தரையர் இனமும் குத்த்தகைக்கு எடுத்திருக்கிற கட்சியின் ஆட்சி ,நாம் எப்போது சிந்திக்க போகிறோம் ,நம்மை நாம் எப்போ சுய பரிசோதனை செய்து கொள்ள போகிறோம் நம் இனத்திற்கான உரிமையை எப்போது பெற போகிறோம் ? தயவு செய்து இன்றைய தினத்தந்தி நாளிதழ் தமிழக அரசின் முழு பக்க விளம்பரத்தை அனைவரும் படிப்பது அவசியம் ,கண்டிப்பாக படியுங்கள் ,திருச்சியில் வரகனேரியில் முத்திரியர் பள்ளி செவந்திலிங்கம் அவர்களின் பெயரில் இடிந்த நிலையில் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளது அந்த பள்ளிக்கு கள்ளர் பள்ளிகளுக்கு அளித்த உதவியில் ஒரு பகுதி செய்து இருக்குலாமே ,நம் பிள்ளைகள் மழை வெய்யலில் அவதி படுவதை தடுத்திருக்கலாமே ? நண்பர்களே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பது அவசியம் ,அதைவிட முக்கியம் காலத்தின் கட்டாயம் நம் இனத்திற்கான வலுவான சுயனலமிலாம்மல் செயல் படகூடிய அரசியல் கட்டமைப்பு உருவாக்குவது எப்போது செய்ய போகிறோம் .?

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

master star in kollywood

கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரை உலகில் சகோதரர் பரதனை தவிர யாரும் இல்லையா என்று சில நண்பர்கள் கேட்டனர் ,இப்போது ஒரு தகவல் ,அதுவும் நண்பர் மணிமாறன் மூலமாக கிடைத்திருக்கிறது ,பாண்டி என்கின்ற சிறுவர் பசங்க படத்தில் ஜீவா என்கின்ற கதாபாத்திரத்தோடு உலாவரும் பாண்டி ஜீவா வை உசுபேற்றும் சிறுவனாக வருவார் ,அதன் பின்னர் வம்சம் ,இப்ப்போது மெரினா என்கின்ற திரைப்படம் வெளிவருவதாகவும் அதில் நல்ல பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இவர் மணிமாறனின் அண்ணன் மகன் என்ற தகவலை இன்று கூறினார் .இவர் சில விருதுகளையும் வாங்கியுருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது ,முத்தரையர் குழுமம் சார்பாக திரை வானில் சக்தி வாய்ந்த மிக பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க இந்த இளம் குருத்தை மனதார வாழுத்துவோம்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

sivapathi back to tamil nadu cabinet.

திரு ,என் ஆர் ,சிவபதி மீண்டும் தமிழக பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் .வாழ்த்துக்கள் .
(இந்த முறையாவது ஆட்சி காலம் முழுவதும் அமைச்சராக முக்கோடி தேவர்களும் ஆசி வழங்க வேண்டுவோம் )

வியாழன், 19 ஜனவரி, 2012

kondaththur bullock festival issue been brought to knowledge of tamil nadu mutharaiyar sangam.

அன்பார்ந்த சகோதர தோழர்களே ! வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நம் இனத்தவர்கள் மாடு விடுவதை தடுத்த முன்னாள் எம் எல் ஏ ,மற்றும் தற்போதைய வேலூர் மாநகராட்சி துணை மேயர் தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் மற்றும் அவரது ஆட்களால் தடுத்து அராஜகம் செய்தது தொடர்பாக ஏற்கனவே எழுதி இருந்தேன் ,அது குறித்து இன்று தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் நிருவாகிகளில் ஒருவாரன திரு ,காடவ முத்தரையர் அவர்களிடம் பேசினேன் அவரும் உடனயாக விசாரிப்பதாகவும் இதை அரசின் மேல் மட்டம் வரை கொண்டு செல்லலாம் என்றும் கூறினார் இது அவர்க்கு தெரியாது என்றும் கூறினார் ,மேலும் தகவல்களை சேகரித்து கொடுக்கும் படியும் அவரும் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார் ,இதை பெரிய அளவில் எடுத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார் .
அந்த ஊரின் நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன் ,மேலும் தகவல்கள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

compermise at odugathur ,vellore district

தற்போது மாடு விடும் சம்பவம் நடந்த ஊரின் நண்பரிடம் பேசினேன் நம்மை தொடர்பு கொண்ட பின்னர் அவர்களிடம் பேசியதாகவும் அந்த சம்பவத்திற்கு காரணமான சேரன் அவர்களே ஒப்புக்கொண்டு மீண்டும் வேறு ஒரு தேதியில் மாற்றி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஆகவே நம் இன மக்களும் சமதனமாகி இருகிறார்கள் ,ஆகவே மேற்கொண்டு இரு இனத்திற்கும் சுமுக உறவு பாதிக்க படகூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற் கொண்டு எதுவும் வேண்டாம் என்றும் தற்போது பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறினார் .இனி இது போல் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் .

திங்கள், 16 ஜனவரி, 2012

vanniyar's dumped our people at near odugathur of vellore outskirts


அன்பார்ந்த சகோதர தோழர்களே !சற்றுமுன் எனக்கு ஒரு தொலை பேசி வந்தது பேசியவர் நமது இனத்தை சார்ந்த இளம் தோழர் இவர் எனக்கு சென்ற வாரம் தான் அறிமுகமானார் ,அதுவும் நமது புதுகோட்டை நண்பர் முத்தரையர் கார்த்திக் ப்ளாக் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டுள்ளார் அவர் எனது தொலை பேசி எண் கொடுத்துள்ளார் அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் அவர் இன்று சற்றுமுன்பு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார் .
அவர் பேசிய பின்பு அவரின் உறவினர் ஒருவர் என்னிடம் பேசினார் அதாவது வேலுரிளிருந்து சுமார் நார்ப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஒடுகத்தூர் என்னும் ஊருக்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள மேட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நமது இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் அதே போல் சுற்று புற கிராமத்தில் வன்னியர்கள் வசிக்கிறார்கள் அவர்கள் இன்று நடை பெற்ற மாடு விடும் திருவிழாவில் நமது இன மக்களின் மாடுகள் விடகூடாது என்று அராஜகம் செய்துள்ளனர் எவ்வளவோ பேசியும் கடைசிவரை அனுமதியாதால் வேதனையுடுன் திரும்பியுள்ளார்கள் ,இதைதான் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கேட்பதற்கு யாரும் இல்லை என்றும் வேதனை பட்டுகொண்டார் .இவ்வளவுக்கும் காரணம் முன்னால் எம் எல் ஏவும் தற்போதைய வேலூர் மாநகராட்சியின் துணை மேயரும் ஆன தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் தான் காரணம் என்றும் கூறினார் .
எப்போது பிறக்கும் விடிவு காலம் நமது இனத்திற்கு என்று தெரிய வில்லை ,!பார்ப்போம் .அந்த தர்மலிங்கம் அதிமுக வை சேர்ந்தவர் ஆவார் .
 ·  ·  · 55 minutes ago near Vellore

புதன், 11 ஜனவரி, 2012

http/www.mutharaiyar.org    -a web site for mutharaiyar community with an international quality which contains mutharaiyar history , list of community vips, officals ,education @ job informations ,matrimony etc.,U can view from 23 may,2012.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

website launch

அன்பார்ந்த சகோதர  நண்பர்களே !முத்தரையர் இணையம் குழு சார்பாக www .mutharaiyar .org  என்ற  தள முகவரியோடு இணைய தளம் வருகிற மே 23 ஆம் தேதி முதல் நம் இனத்தின் சரித்திரம் மற்றும் அனைத்து தகவல்களோடு செயல் பட போகிறது அதற்க்கான கட்டமைப்பு பணிகள் ஆரம்பமாகி விட்டது ,என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .


                                                  Dear friends from 23rd may 2012,onwards with an international quality a website for our community pertaining history ,vip's,list,community's  political outfits, matrimony,job informations,education related informations all those things which is very useful to our community .the related construction work has been started.this is for information.

சனி, 31 டிசம்பர், 2011

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ,நமது பேரரசரின் ஆசியோடு மீண்டும் வருங்காலம் நமதாக்குவோம் !
 wishing u all very great honey,bonny ,peaceful new year.make turn around this year as base year for _MUTHARAIYAR.
picture ;mr,kannan adaikalam.

trichy-18, friends meet

hello to all ,our facebook friends meet succesfully held on december 18 th sunday,at sevanthy lingam muthiriyar school ,varaganeri ,trichy.all friends have been shared among friends.well begining ,will continoue.thanks tp all.expecting u in next meet.bye ,bye.
                                                       நமது இன சகோதரர்கள் முக நூல் நண்பர்கள் சந்திப்பு இனிதே நடை பெற்றது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது ,பரஸ்பர அறிமுகங்களுடன் ஆரம்பித்த சந்திப்பு விவாதங்கள் ,அலசல்கள் என இனிதே நிறைவுற்றது ,அடுத்த சந்திப்பில் உங்களையும் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன் .

திங்கள், 12 டிசம்பர், 2011

friends it's our duty that let us make our younger generation must know our history ,kingdom ,our rulers ,because when while iam going by two wheeler after finishing my work at gudiyatham towards vellore via kvkuppam (katpadi junction road) a teenager wearing t-shirt with an  image of lion on the back and front emperor perumbidugu muthariyar after seeing this made a u turn and catched a teen ager and asked him who's he in you t shirt teenager replied me that he's veera pandiya kattabomman ,i was shocked that's what he taught we cant blame him becaus that's not his mistake ,mistake is ours properly he was teached by us,let's joins to gether and atleast from now we younger generation must start a campaign among our youngsters who we are? and what we want do ?to flourish our community.

let us do it

நண்பர்களே வேலூர் மாவட்டம் குடியாத்தம் -காட்பாடி சாலையில் வேபநேரி கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் அணிந்திருந்த t-shirt படம் சிங்கம் பின்புறமும் ,மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் கம்பிரமான படம் முன்புறமும் இருந்தது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் சிறிது தூரம் கடந்த பின் திரும்பி சென்று அந்த படத்தில் உள்ளது யார் என்று கேட்டேன் அதற்க்கு அவர் வீர பாண்டிய கட்டபொம்ம்மன் என்று கூறினார் அந்த அளவுக்கு தான் அவர்க்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது ,ஆனால் நம் இனம் மீது பற்று வைத்து முத்தரையர் என்று நம் இனத்தை தாங்கிக்கொள்ள புறப்பட்டிருக்கும் வீர இளைஞர் படை .இது போன்று நாம  யார் என்று தெரியாமல் நம் மன்னர்கள் யார் ,நம் சரித்திரம் என்ன என்று தெரிய படுத்தாமல் விட்டது யார் ? நாம் தானே இனியேனும் இந்த நிலையை மாற்றி வருங்கால சந்ததியினரக்கு புரிய வைத்து நம் இனத்தை வளர்ப்போம் ,இளைஞர்களின் சக்தியை ஒன்றிணைத்து சமுக நலனை கருத்தில் கொண்டு போராடுவோம் ,வெற்றி பெறுவோம் .

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

At last mr paranjothi tamil nadu law minister belongs to mutharaiyar community has been terminated but say's he's resigned ,the reason behind was belived that as the reports comming by medias makes very clear that the failure of former deputy cm ,case filed by the police of tamil nadu and not able to arrest him ther fore the police higher offical mr ,manicka vel has transfered and paranjothi was resigned,this is the truth not because of case filed against paranjothi in trichy court.our community people must understand this.once again our community neglected by by making blank in the cabinet of tamil nadu .

happened what we expected ?

கடைசியில் நாம் எதிர்பார்த்தது நடந்தே விட்டது !ஆம் ,திரு பரஞ்சோதி மாண்புமிகு அமைச்சர் இப்போது முன்னாள் அமைச்சர் ஆகிவிட்டார் நம் இனத்திற்கென்று இருந்த ஒரே அமைச்சர் விலக்கப்பட்டார் ஆனால் பதவி விலகியதாக அறிவிக்கபடுகிறது .அடுத்தது நம் இனத்திற்கென்று எந்த அமைச்சரையும் நியமிக்கவில்லை வேதனை அளிக்க கூடியது நாம் அனைவரும் வருத்தப்படவேண்டிய ஒன்று ,நம் இனம் தொடர்ந்து உதாசின படுத்த படுகிறது தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற ஒரு இனம் நம் ஒற்றுமை இன்மையால் புறகனிக்கபடுகிறோம்,முதல்வர் நினைத்து இருந்தால் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை ,நீதி மன்றத்தில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே கட்டயாம் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று ஒன்றும் கட்டயாம் இல்லை ,என் மாண்பு மிகு முதல்வர் அவர்கள் மீது கூட வழக்கு பெங்களுரு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ,அப்ப்டியுருக்க திரு பரஞ்சோதி நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரையில் தாரளமாக மந்திரி பதவியில் நீடிக்கலாம் ,ஆனால் என்ன செய்வது உட்கட்சி விரோதிகள் துணையின்றி எதுவும் நடக்க முடியாது இடை தேர்தல் சமயத்திலேயே இது குறித்து நாம் எழுதியுருந்தோம் அது நிஜம் என்று தேர்தல் தீர்ப்பு வந்துடனேயே அது உண்மை என்பது போல பல  பத்திரிக்கைகளில்  செயிதி வெளியானது ,இப்போதும் அதுதான் நடந்து இருக்கிறது ,இருக்கிற சிவபதியை நீக்கிவிட்டு பரஞ்சோதி அவர்களை நியமித்து இப்போது அவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் ,இதுபோல் எந்த இனத்தையும் எந்த கட்சியும் ஒரு இனத்தை புறக்கணிப்பது   இல்லை நம் இனத்தை போல் !பத்திரிகைகளில் வரும் செய்திகளை   பார்த்தால் வழுக்கு மட்டுமே பரஞ்சோதி பதவி விலகலக்கு காரணமில்லை திமுக முன்னாள் துணை முதல்வர் மீது பதிவு செய்த வழக்கு போதுமான ஆவணங்களுடன் பலமாக வழக்கு பதிவு செய்யபடவிளையாம் அதனால் தான் காவல் துறை அதிகாரி திரு பொன்.மாணிக்கவேல் பணியிட மற்றம் செயுதும் திரு பரஞ்சோதி அவர்கள் பதவி வில(க்)கலும் நடந்துள்ளது என்பதை நம் இன மக்கள் உணரவேண்டும் ,திரு முன்னாள் துணை முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றால் காவல் துறையும் ,வழகறிஞர்களும் தான் பொறுப்பு ஆனால் ஊருக்கு இளைத்தவன்  பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் நம் ஆணடியக்கிவிட்டார் முதல்வர் ,நம் இனத்திருக்கு புரியுமா ?       

திங்கள், 5 டிசம்பர், 2011

court ordered to file a case against paranjothi ,tamil minister.

திருச்சி நீதி மன்றம் தமிழக அமைச்சர் மாண்புமிகு பரஞ்சோதி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆணையுட்டுள்ளது ,அதன்படி அவர் மீது வழக்கு தொடர ஆளுநரின் அனுமதி கோரியுள்ளது திருச்சி காவல் துறை ,என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் என்று எதிர்பார்கிறது ஒட்டுமொத்த தமிழகமும் ,நாமும் தான் . 
                                    the trichy court orderded to file a case against hon'ble tamilnadu law minister mr, paranjothi against case filed by so,called second wife dr,Rani ,accordingly trichy police seek governer permission to file a case against him.
                                     




திங்கள், 28 நவம்பர், 2011

mutharaiyar facebook friends meet-1 at TRICHI

நமது முத்தரையர் நண்பர்கள் முகநூல் தளம் மூலமாக முதல் சந்திப்பிற்கான கூட்டம் திருச்சியில் நடை பெறுகிறது நமது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன் ,இது ஒரு நல்ல தொடக்கம் நமது இளைஞர்கள்   மற்றும் வருங்கால     சந்ததியனருக்கு நல்ல வழி காட்டதலாக இருக்கும் என நம்புகிறேன் .  

புறப்படுங்கள் திருச்சியை நோக்கி நாள் திசம்பர் -18  இடம்  முத்தரையர் பள்ளி ,வரகனேரி ,திருச்சி .திரு ,ஆர் ,வி அலுவலகம் அருகில் .


FRIENDS OUR FACEBOOK MEMBER'S ARRANGING INTRODUCTION MEETING ,FIRST TIME AT TRICHY ,VARGANERI MUTHRAIYAR SCHOOL AS A VENUE ,LET'S MEET THEIR.
DAY 18TH DEC-2011.BY 10.30 AM.(SUNDAY)

ஞாயிறு, 27 நவம்பர், 2011

nakkheeran reports attack on our community members

இந்த அராஜகம் முத்தரையர் கோட்டை எனப்படும் திருச்சியில் தான் அரங்கேறியது ,திருச்சி சாத்தனூர் பகுதியில் கொடியேற்ற  வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் சென்ற  இன சொந்தங்களை அங்கு உள்ள இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் (கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறபடுவதாக நக்கீரன் செய்தி வெளியுட்டளது )  இந்த கொலை வெறி தாகுதல்கல்களை   நடத்தியுள்ளனர் ,இத்தனைக்கும் காவல் துறை அனுமதி பெற்று கொடியேற்ற சென்றவர்களை காவல் துறையே வழக்கு போட்டு உள்ளே தள்ளியதாக கூறியுள்ளார் திரு செல்வகுமார் .


                                  என்னவாக இருந்தாலும் இந்த கொலை வெறி தாக்குதலை கண்டு

உள்ளம் கொந்தளிக்கிறது ,நாமும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்போம் ,இது போன்ற தாக்குதல்கள் இனி  நடை பெறா  வண்ணம் ஒன்று பட்டு முறியடிப்போம் .

வெட்டுப்பட்டு  மருத்துவமனையில் வாடும் நம் சொந்தங்களுக்கும் ,சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் வருத்தத்தையும் ,வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம்.    

சனி, 5 நவம்பர், 2011

sivapathi out paranjothi in the tn cabinet

அன்பர்களே அமைச்சர் சிவபதி நீக்கப்பட்டு அதற்க்கு பதிலாக திரு பரஞ்சோதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ,வாழுத்தும் அதே  சமயத்தில் வருத்தப்படாமலும் இருக்க முடியாது !இது நம் இனத்தின் சாபக்கேடு !நம் இனத்திற்கு மூத்த முன்னாள் அமைச்சர்க்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம்,நம் இனம் அதிமுகவிற்கு சொந்தமான இனம் என்று மற்ற கட்சிகள் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அதிமுகவின் வாகு வங்கி ஆனால் போனால் போகிறது பிழைத்துக்கொள்ளுங்கள் என்கின்ற அளவிற்கு ஒரு அமைச்சர் பதவி வீசபடுகிறது என்பது வேதனை அளிக்கும் சம்பவம் ,இதை நம் ஒன்றுபட்டால் வருங்கலத்தில் மாற்றிகட்டலாம் ,ஒன்றுபடுவோம் ,வெற்றிபெறுவோம் .