வெள்ளி, 18 அக்டோபர், 2013

அனைத்து சமுதாய கூட்டம் யாருக்கு பயன் ?

அணித்து சமுதாயம் என்கிற பெயரில் நடை பெற்று வருகின்ற கூட்டத்தால் பயன் அடைவது யார் என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ,இந்த அனைத்து சமுதாய கூட்டம் என்பது இன்று இரு பிரிவுகளாக பிரிந்து நடந்து கொண்டிருக்கிறது ,ஒரு பிரிவு வன்னிய சமுதாயம் சார்பில் மருத்துவர் ,ராமதாஸ் அவர்கள் தலைமையில் ஒரு அணியாகவும் கொங்குவேளாளர் கவுண்டர் பேரவை சார்பாகவும் நடை பெற்று கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்துக்கொள்வது அவசியம் .

இந்த இரு பிரிவு நடத்தும் கூட்டங்களுக்கும் "முத்தரையர் " சமுதாயம் பெயரளவில் கலந்து கொள்ளுகிறது அதுவும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் கலந்து கொள்ளுகிறார்கள் இதில் திரு ,ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தின் இறுதியில் கொடுக்கப்படும் ஊடக  அறிக்கைகளில் போனால் போகிறது என்று கடைசி யாக முத்தரையர் சங்கம் என்று சிலதில் மட்டும் பெயர் வரும் ,ஆனால் சமிபத்தில் சேலத்தில் கொங்கு அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தின் அறிக்கையில் அதுகூட கிடையாது ,ஆனால் அந்த கூட்டத்தில் திரு ,மரு,பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாக ஒரு செய்தியை முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார்கள் .அதிலும் அவர் பேசியதாக வந்திருக்க கூடிய செய்தி ஏற்றுக்கொள்ள கூடிய செய்தியாக இல்லை காரணம்,மோடியை ஆதரிப்பது என்பதும் பசும்பொன் தேவர் ஜெயந்தி அனுமதிக்காக இவர் போராடுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை ,காரணம்
1) மோடியை ஆதரிப்பதனால் இவர் சார்ந்திருக்க கூடிய "முத்தரையர் " சமுதாயதிருக்கு  மோடி கொடுத்திருக்க கூடிய உறுதி மொழி என்ன ,அதனால் "முத்தரையர்" சமுதாயம் பெறக்கூடிய பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு என்பது ரசிக்கும்படியாக இல்லை ,இவர் சார்ந்திருக்க கூடிய "தமிழ் நாடு முத்தரையர் சங்கம் " பழமையான இனத்தின் முதன்மையான சங்கம் அந்த சங்கத்தில் உயர்மட்ட கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு சாதக பாதக அம்சங்கள் விவாதித்து ஒருமனதாக நிறைவேற்று பட்டதா என்று தெரியவில்லை !அப்படி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்று பட்டிருந்தால் அதன் தலைவர்களான திரு ,குழ ,செல்லையா,மற்றும் திரு ,ராஜமாணிக்கம் அவர்களும் ஏற்றுக்கொண்டார்களா ?என்று தெரியவில்லை ,காரணம் ,திரு ,குழ ,செல்லையா அவர்கள் இன்று அதிமுகவில் இருக்கிறார் ,திரு ,ராஜமாணிக்கம் அவர்களும் அதிமுக அரசுக்கு ஆதரவு நிலையில் இருப்பவர்தான் அப்படியுருக்க இவர் எப்படி மோடியையும் ,பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ,குரு பூஜைக்கு அனுமதிக்காக குரல் கொடுக்கிறார் என்று புரியவில்லை ,

எனது வருத்தமெல்லாம் சென்ற ஆண்டுக்கு முந்தைய சதய விழாவில் நம் முத்தரையர் மக்கள் காவல் துறை மற்றும் வேறு சில அமைப்புகளும் தாக்கப்பட்டு அதற்காக தமிழ் நாடு " முத்தரையர் முன்னேற்ற சங்கம்" நிறுவன தலைவர்  திரு ,ஆர் ,விஸ்வநாதன் அவர்களும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைது செய்து சிறை படுத்தப்பட்ட  போது  இவர் செய்தது என்ன அறிக்கை விடுத்து கண்டித்தாரா ?அல்லது ராமேஸ்வரம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து வந்த நமது இனத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது இவர் குரல் கொடுத்தாரா ?இல்லையே ஆனால் இன்று மட்டும் தேவர் குரு பூஜை அனுமதிக்கு குரல் கொடுப்பது ஏன் ?

இன்று தேவர் குரு பூஜைக்கு குரல் கொடுக்கும் அனைத்து சாமுதாய இயக்கம் அன்று திருச்சியில் காவல் துறையால் நமது இன சொந்தங்கள் அடித்து நொறுக்கப்பட்டு ,சிறையில் அடைத்தததை கண்டித்து குரல் கொடுக்காதது ஏன் ?ஆனால் இன்று மட்டும் கூட்டதிருக்கு முன்பே பேசி முடிவு செய்து விட்டு அதை வழிமொழியவும் ,சாட்சி அத்தாட்சி வழங்க நாம் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?இதற்க்கு பதில் சொல்ல போவது யார் ?

மேலும்  கொங்கு அமைப்பு திரு ,மணிகண்டன் அவர்களுக்கு "முத்தரையர் " இனம் தமிழகத்தின் பெரும்பான்மை இனம் என்று அவரது கவனத்திருக்கு கொண்டு சென்றோம் அதுவும் இதேப்போல் ஒரு கூட்டம் போட்டு பத்திரிக்கை செய்தியை பார்த்து திரு ,கவியரசு அவர்களும் நானும் பார்த்து விவாதித்து பின்பு நான் திரு ,மணிகண்டன் அவர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசி அவருக்கு எடுத்து சொன்னோம் அப்பது அவர் நம் இனத்து  பிரமுகர்கள் குறித்து கேட்டபோது நம் இனத்தின் பிரமுகர்கள் பெயர்கள் பெயர்கள் எல்லாம் சொன்ன போது திரு ,ஆர் .வி  அவர்களின் பெயரை கேள்வி பட்டுருக்கிறேன் என்றார் அடுத்து நாமக்கல் கூட்டதிருக்கு நமக்கும் அழைப்பு அனுப்பியுருந்தார் ,இந்த சேலம் கூட்டதிருக்கும் அழைப்பும் வந்திருந்தது ,ஆனால் எல்லாம் முடிவு செய்து விட்டு நம்மை அழைப்பது நமக்கு சரியாக படவில்லை என்பாதாலும் சாட்சிக்கு போவது சரிப்பாடாது என்பதால் அந்த கூட்டதிருக்கு செல்ல வில்லை ,எந்த ஒரு முடிவும் அனைத்து சமுதாய தலைவர்கள் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும் அதுதான் மரபு ஆனால் அந்த மரபே இங்கு பின்பற்றப்படவில்லை என்கிற போது அதில் கலந்து கொள்வது எப்படி சரியாகும் ,எப்படி அழைக்கிறார்கள்  என்று தெரியவில்லை !இனி மேலாவது எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும் என்பது நமது ஆவா! முத்தரையர் சமுதாய தலைவர்கள் யோசிக்கவேண்டிய தருணம் இது ?
மேலும் இந்த சமுதாய கூட்டங்களால் பயன் பெற போவது அதன் தலைவர்களே தவிர அந்த இன மக்கள் அல்ல !




முத்தரையர் நண்பர்கள் மேல பதிக்கப்பட்டுள்ள  செய்தி அறிக்கைகளில் "முத்தரையர் " இனத்தின் பெயர இருக்கிறதா ?என்று பாருங்கள் , இதுதான் நடக்கும் என்பதால் தான் நாம் இந்த கூட்டதிருக்கு செல்ல வில்லை ? முத்தரையர் இனம் தமிழகம் முழுக்க இருக்க கூடிய இனம் இனியாவது விழித்துக்கொண்டு நம்மை பலபடுத்தி கிள்வது அவசியம் ,வருகின்ற தேர்தலில் முத்தரையர் இனத்திருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ,வாய்ப்பளிக்கிற கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு தர வேண்டும் அது எந்த கட்சியானாலும் சரி !இனி கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதை நிறுத்தி விட்டு நம் இனத்திருக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக