இந்த செய்தி வரவேற்க கூடிய நல்லதொரு முடிவு என்பதில் முத்தரையர்களுக்கு மாறுப்பட்ட கருத்து எதுவும் இருக்கமுடியாது ,காரணம் முந்தைய புதுக்கோட்டை தொகுதி தற்போது சிவகங்கை மற்றும் திருச்சி நாடாளமன்ற தொகுதியோடு பிரித்து இணைக்க பட்டிருக்கிறது நம் இனம் பெரும்பான்மை இனமாக புதுக்கோட்டை தொகுதி இருந்தது ,வெற்றி தோல்வி தீர்மானிக்கும் தொகுதியாக முத்தரையர் தொகுதியாக இருந்தது அதை இப்போது திருச்சி ,சிவகங்கையாக கூறு போட்டுவிட்டார்கள் ஆயுனும் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசாமாக உள்ள தொகுதியாகவே இருக்கிறது அதுவும் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் நம்மவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வெற்றிதான் ,இன்னமும் நாம் நமக்கு வேண்டியதை கேட்டு பெற விட்டால் நமது நிலைமை மேன்மை அடையாது என்பது உறுதி ,அதேப்போல் விருதுநகர் ,பெரம்பலூர் ,திருச்சி இரண்டு ஆகிய தொகுதிகள் நமக்குண்டானவை இதில் நம் இனத்தை ஒரிங்கினைத்து ஒற்றுமையுடன் போட்டியுட்டால் இன்னும் சில சமுக மக்களுடன் ஒரு உடன் பாட்டோடு செயல் பட்டால் வெற்றி நமக்குத்தான் !ஆனால் இந்த நிலைமை இப்போதைக்கு இல்லை ,ஆகையால் திமுக அல்லது அதிமுக வில் இவ்வளவு நாள் நாம் உழைத்ததற்கு நமக்கு உண்டான பங்கை கேட்டு பெறுவதுதான் சரி !பெற்றே ஆக வேண்டும்,அப்போது தான் நம் இனத்தின் வளர்ச்சி சாத்தியமாகும் எந்த கட்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் அவருக்கு ஒட்டு மொத்த முத்தரையர் இனமும் கட்சி பாராமல் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக