அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
உண்மையில் இதற்காக போராட வேண்டியது முத்தரையர் இனம் தான் ,இன்றைய நிலையில் தமிழகத்தில் முத்தரையர் இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய இரண்டு கோடியே முப்பது லட்சம் மக்கள் இருப்பார்கள் இது இருபத்தி ஒன்பது பிரிவுகளையும் சேர்த்து தான் ,இவர்களில் சற்று ஏறக்குறைய இருபது சதவீதம் மக்கள் மட்டுமே கல்வியறிவு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள் என்பது உறுதி மிச்ச என்பது விழுக்காடு மக்கள் இப்போதே கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் ,இப்போது தான் நம் மக்கள் ஓர் அளவுக்கு பள்ளிகள் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் இப்போது தான் கல்லுரி ,தொழிற் கல்வி ,பொறியல் ,சட்டம் என்று கால் பதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்களை பார்த்துதான் மற்றவர்களும் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் இப்போது போய் பள்ளிகளை மூடுவது அல்லது தொலை தூரத்திருக்கு செல்வது என்பது மீண்டும் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு தான் போவார்கள் காரணம் பேருந்து கட்டணம் அந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறது வாங்கும் கூலியில் பள்ளி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் கட்டுவது என்பது இயலாத காரியம் !
மேலும் இன்றைய தனியார் பள்ளிகளும் சமசீர் கல்வியால் மெட்ரிக் முறையில் இருந்து சி பி எஸ் சி முறைக்கு மாறிக்கொண்டிருகிரார்கள் ,கட்டணம் செலுத்தி மாளாது என்பது அனைவரும் அனுபவித்து பார்க்கிறோம் ,ஆகவே ஏழைகள் கல்வி பயல வேண்டுமென்றால் இப்போதிருக்கும் பள்ளிகள் மூடவோ ,குறைக்கவோ கூடாது மாறாக தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி தரத்தை அளிக்க வேண்டும் மக்களிடேயே அரசு பள்ளிகள் தரமானது என்பதை எடுத்துகூறி பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும் அதற்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை ,அதை விடுத்து மாணவர்கள் வரவில்லை என்று காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது அப்புறம் தகுதி தேர்வு என்ற பெயரில் இருக்கும் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்புவது தான் நோக்கம் காரணம் ஒரு காலத்தில் உயர குல ஆட்கள் மட்டுமே நோகாமல் செய்த வந்த பணி பிற இன மக்களும் செய்வது அதன் மூலம் சமுகத்தில் அங்கீகாரத்தோடு வாழுவது பிடிக்காமல் தான் அரசு துறைகளை தனியார் மயமாக்குவது ,பள்ளிகளை மூடுவது என்று தகிடு தத்தங்களை அரங்கேற்றி வருகிறது ,உண்மையில் அனைத்து சமூகமும் ஒன்று சேர்ந்து முறியடிக்க படவேண்டியது அவசியம் ஆனால் அவர்கள் இன்று அதற்க்கு ஒத்து ஓதுவது அதன் மூலம் அவர்கள் மட்டும் ஆதாயம் அடைய முயல்கிறார்கள் ,அவர்கள் சார்ந்திருக்க கூடிய சமுகத்தை பற்றி கவலை இல்லை அவர்களுக்கு இனத்தின் பெயரை சொல்லி அவர்கள் பயன் அடைந்தால் போதும் என்று இருப்பதை வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக