தமிழர்களின் வீர விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.இப்படிப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சீரோடும் ,சிறப்போடும்நடத்துவது மன்னர் பரம்பரையில் தோன்றிய "முத்தரையர்" இனம் என்பது இன்னும் வெளி உலக்குக்கு தெரிய வராத ,தெரியபடுத்திகொள்ள அறியாத " முத்தரையர் " இனம் ,என்பதை இனியேனும் நாம் வெளிகொண்டுவருவோம் ! ஆண்டு தோறும் ஜன., 14ல் அவனியாபுரத்திலும், ஜன.,15ல் பாலமேட்டிலும், ஜன.,16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை களம் இறக்குவர். மதுரை தவிர்த்து தமிழகத்தில் திருவாப்பூர், வேந்தன்பட்டி பொன்அமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) சிரவயல்(காரைக்குடி மாவட்டம் ) கண்டுப்பட்டி (சிவகங்கை )பல்லவராயன் பட்டி (கம்பம் ) கொண்டலாம்பட்டி ,தம்மம்பட்டி (சேலம் மாவட்டம் )போன்ற இடங்களில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தமானது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக