திருச்சி அருகே இன்று முத்தரையர் சிலை அவமதிப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு
Tiruchirappalli செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 3:11 PM IST


தொட்டியம், ஆக. 14-
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்.புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு இன்று அதிகாலையில் யாரோ `மர்ம' நபர்கள் செருப்பு மாலையை அணி வித்து அவமதித்து சென்று உள்ளனர்.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் ஊருக்குள் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து சிலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்கள் முத்தரையர் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர். தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இமெயில்
பிரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக