ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அதிமுக திருச்சி மாவட்டம் பொறுப்பில் முத்தரையர்கள் செல்வாக்காக இருந்த காலம் உண்டு அமைச்சர்கள் கூட நிமிர்ந்து நின்ற காலம் உண்டு( இன்று அதிமுகவில் எந்த அமைச்சரும் நிமிர்ந்து நிற்க முடியாது என்பது வேறு விஷயம் !)நம்ம நிலைமை தான் பரிதாபம் நமக்கு இருக்கும் ஒரே அமைச்சர் மாண்பு மிகு பூனாட்ச்சி அவர்கள் ,அவர்களின் துறை மற்றும் அவரின் அதிகாராம் எத்தகையது என்று சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை ,நிற்க திருச்சி அதிமுக என்பது :குமார் பி லிட் : என்றாகி விட்டது நம்ம கட்சி "அதிமுக"வில் அப்புறும் மனோகரன் முருகன் என்ன முத்தரையரா என்று கேட்ட கடவுளின் தூதர் இந்த இருவர் என்ன செய்தாலும் ஏற்று கொள்ளும் நம்ம "அம்மா "நம்ம முன்னாள் அமைச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியுருக்கு பரஞ்சோதி ,சிவபதி இருக்கிற இடமே தெரியுல ,இனத்தின் அறிவு ஜீவி முன்னாள் அமைச்சர் :மா மன்னர் முத்தரையர் சிலைக்கு சொந்தக்காரர் அன்புக்குரிய திரு கு.பா அவர்கள் மிக திறமையானவர் என்று பெயரெடுத்த கு.பா அவர்களை கண்டு கொள்ளாதது நம் இனத்தின் பலம் பலவீன பட்டிருப்பதாகவே தெரிகிறது ,மீண்டும் மலை கோட்டையில் சிங்க கொடி பறக்க வேண்டும் அதற்க்கான வேலைகள் ஆரம்பிக்க வேண்டும் அடிப்போர் அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அது ,குமார் மற்றும் மனோகர் மீது இருக்கும் புகார்களை தொடர்ந்து கார்டன் நோக்கி அம்புகளாக சீரட்டும்உடனடியாக இல்லா விட்டாலும் பலன் கிடைக்கும் ,தொடரட்டும் அம்புகள் திருச்சி நமதாகட்டும் திரு ,கு ப அவர்கள் அமைச்சராகட்டும் அப்போதுதான் நம் தேவைகள் அவர் மூலம் கொண்டு செல்ல பட்டு நிறைவேற்ற வழி பிறக்கும் மற்றவர்கள் ஆனாலும் திரு ,கு.ப அவர்களின் அளவுக்கு கேட்டு பெற முடியாது ,முத்தரையர்கள் கட்சி கட்டு [ஆட்ட்டுக்குள் வரவேண்டுமெனின் அதிமுகவில் குபா ,திமுகவில் திரு ,என் செல்வராஜ் அவர்கள் பொறுப்புக்கு வந்தால் தவிர நம்ம நிலைமை மாறாது இருவருமே தேவைகளை தயக்கமின்றி பேச கூடியவர்கள் என்பது அப்பட்டமான உண்மை மற்றவர்கள் தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மைகள் தான் !

புதன், 30 ஜூலை, 2014

காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவுகளில் வேலூர் சத்துவாசாரியை சார்ந்த திரு ,சதீஷ் குமார் அவர்களுக்கு தமிழக அரசு ஐம்பது லட்சம் வழங்கி ஊக்கபடுதியுருக்கிறது நன்றிகளும் பரிமாற பட்டிருக்கிறது ஆனால் அதே சமயம் ஸ்பெயின் குடியுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் அவர்களுக்கு மூன்று கோடி ருபாய் பரிசளித்தது போல் தமிழகத்தை சார்ந்த வசதி குறைவான குடும்பத்தை சார்ந்தவருக்கு அதில் மூன்றில் ஒரு பங்காவது ஒரு கோடி ரூபாயாவது அறிவிக்கும் தமிழக அரசு என்கிற எதிர் பார்ப்பு இருந்தது ,அதை தான் பெரும்பாலான நண்பர்கள் கேட்கிறார்கள் ?அளவுக்கோல் ஆளுஆளுக்கு வேறு படுமா ?இல்லையெனில் இவருக்கும் அதை கிடைக்க செய்திருக்கலாமே அரசு !தமிழக தமிழனுக்கு இன்னும் செய்யுமா தமிழக அரசு !
திரு ,சதீஷ் சிவலிங்கம் அவர்களின் காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தங்க பதக்கம்  பெற்று சாதித்து காட்டியுருகிறார் அதற்க்கு தமிழக அரசு ஐம்பது இலட்ச ருபாய் ஊக்கத்தொகையாக அறிவித்திருக்கிறது ,நன்றி தெரிவித்து கொள்கிறோம் ,ஆனால் செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஸ்பெயின் குடியுரிமை பெற்று இருப்பவருக்கு கோடிகளை அறிவித்தது ஆகையால் நமக்கும் அந்த எதிர் பார்ப்பு இருந்தது !பரவ இல்லை இந்த லட்சங்கள் லட்சியத்தை அடைந்தற்க்கு அங்கீகாரமாக எடுத்து கொள்வோம் .நன்றிகளுடன் .
நண்பர்கள் நிறைய பேர் என்னிடம் ஏன் ப்ளாகை மறந்து விட்டீர்கள் என்பது மறக்க வில்லை நேரமின்மை மற்றும் மற்ற சமுக தளங்களில் எழுதுவதற்கே முடியவில்லை ஆகாயல்தான் மற்றபடி வேறு எதுவமில்லை ,நிற்க ,மிகந்த மகிழ்ச்சி அளிக்க கூடிய நிகழ்வு அது "தங்கம் "பதக்கம் வென்றிருக்கும் நம் முத்தரைய சிங்க இளைஞன் திரு ,சதீஷ் சிவலிங்கம் ,வேலூர் சத்துவாச்சாரியை சார்ந்த சாதனை படைத்த அவரை வாழ்த்த வார்த்தைகள் இன்றி தேட வேண்டியுருக்கிறது நெஞ்சமெல்லாம் குதுகலம் ,ஆனந்த கண்ணீர் இனிய வாழ்த்துக்கள் ,அவருக்கு சமர்பிக்கலாம் என்னோடு சேர்ந்து நீங்களும் தான் ,

சாதனை எடையை தூக்கி தற்போதய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுருக்கிறார் ,அவரின் கடுமையான நான்கு வருட முயற்சி அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தேசம் ,அனைத்து உலக தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் அது மிகை இல்லை ,இது இது தான் இது போன்ற சாதனைகள் மட்டுமே நம் இணத்திருக்கும் நம் இளைஞர்களுக்கும் ஊக்குவிக்கும் எல்லோரையும் இது போல் சாதிக்க வைக்க தூண்டு கோலாக இருக்கும் ,இனியேனும் நம் இளைஞர்கள் வெறும் உணர்ச்சி குவியலாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டும் ,அது அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ,நம் இனத்திருக்கும்  பெருமை தேடி தரும் .

இத்தகைய சாதனை புரிய பின்பலமாக இருந்த அவர்களின் பெற்றோர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் !

ஞாயிறு, 15 ஜூன், 2014

திருச்சி மாவட்டம் பெரம்பலூர்  தொகுதியில் நாடாலாமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக திரு ,மருதை ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 




திங்கள், 6 ஜனவரி, 2014

https://www.change.org/en-IN/petitions/chiefminister-of-tamilnadu-chennai-india-demanding-to-issue-go-to-bring-all-29-sub-castes-of-mutharaiyar-community-under-mbc-and-15-separate-reservation-in-both-education-and-job#share
வட இந்திய முத்தரையர் பிரிவான கோலி இனத்தை சார்ந்த நண்பர் டில்லி சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தேர்ந்து எடுக்க பட்டு இருக்கார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமம் தெரிவித்து கொள்கிறது !
கரூர் நாடாளமன்ற தொகுதியில் முத்தரையர் இன் மக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்ச்சத்து நாற்பது ஆயிரம் ,கொங்கு வெள்ளாள கௌண்டர் மக்கள் தொகை நாற்ப்பது ஆயிரம் ,நாடாள மன்ற உறுப்பினர் ,தம்பிதுரை ,கொங்கு வேளாளர் .அங்கு கரூர் அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகலாக இருக்கிறார் இந்த முறை அதிமுக அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா ?அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ?ஒற்றுமையுடன் கூடிய பலம் .

திருச்சி நாடாளமன்ற தொகுதியிலும் நம் மக்கள் தொகை மூன்று லட்ச்சத்து என்பது ஆயிரம் வாக்குகள் ,கள்ளர் இன் மக்கள் ஒன்றேகால் லட்சம் இங்கும் நம் இனத்தவர் நாடாளாமன்ர உறுப்பினர் கிடயாது ?முத்தரையர் இன மக்கள் யோசிக்க வேண்டிய நேரமிது ?

இந்த முறை திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளும் வாய்ப்பு மறுக்கும் பட்சத்தில் நம் இனம் சார்பாக ஒருமனதாக ஒருவரை தேர்வு செய்து களம் கண்டு தனியாக சுமார் ஐம்பது முதல் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றாலே வருகிற சட்ட மன்ற தேர்தலில் நம் பங்கு நமக்கு தேடி வரும் ?

இது கண்டிப்பாக முடியும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று பட்டாலே இதை சாதிக்க முடியும் ?காலம் கனிந்து வருகிறது பயன்படுத்தி கொள்வது நம் சாதுறியம் ?உறுதியோடு முடிவெடுப்போம் !இன தலைவர்கள் புரிதலோடு செயல் பட்டால் சாதியமே ?
கர்னாடக மாநிலத்தில் உள்ள முத்தரையர் இன பிரிவுகள் மொத்தம் முப்பத்தி இரண்டு ,மொத்த மக்கள் தொகை சுமார் என்பத்தி ஆறு லட்சம் ,இரெண்டு அமைச்சர்கள் இருபத்தி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கள் ,ஆனால் நான்கு அல்லது ஐந்து அமைப்புகள் மாநில தலைவர்கள் ,ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இயங்கி கொண்டுருக்கிறது ,இங்கே சிலர் Aக்ரூப் ,B க்ரூப் என்று அழித்து கொண்டிருக்கிறார்களே அதேப்போல்தான் அங்கும் இருக்கும் போல !மாறனும் ,மாற்றம் மற்றுமே நிலையானது ,வாழ்வு அளிக்க கூடியது !
முன்னால் அமைச்சர் திரு ,தங்கம் தென்னரசு அவர்களுடன் ஒரு வரலாற்று பதிவில் விவாதித்த போது அவர் தந்த பதில் ,இது போன்று சில வரலாற்று ஆராய்ச்சியாளார் களிடம் கூட மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது முக்கியமாக திரு ,மைலை சீனி வேங்கடசாமி அவர்கள் தான் நம்மை பற்றி பெரிதாக வெளி கொண்டு வந்தார் என்பார்கள் ஆனால் அவர்களின் நிறைய புத்தகங்களை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அலசி விட்டேன் எதிலும் தெளிவாக ஆணித்தரமாக பதிந்திருக்க மாட்டார் ஆனால் திரு ,நடன காசிநாதன் அவர்கள் தெளிவாக ஆணித்தரமாக பதிவிட்டுருப்பார் .நம் சாம்ராஜ்யத்தை குறித்து அவரை விட தெளிவாக வேறு யாரும் எழுதவில்லை ,திரு ,ராஜசேகர தங்கமணி ,திருமலை நம்பி போன்றவர்கள் கூட காசிநாதன் அவர்களின் ஆராயிச்சியை மேற்கோள் காட்டிதான் பதிந்திருபார்கள் .
இன்று jan 3 கட்டபொம்மன் பிறந்த நாளை நம் இன இளைஞர்கள் முத்தரையர் என்று கருதி கொண்டாடி வருகின்றனர் ,அவருக்கும் முத்தரையர் இனத்த்திருக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லை ,கட்டபொம்மன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை ஆண்ட சின்ன குறுநில மன்னர்கள் அவர்களை விஜய நகர மன்னர்கள் போரில் வென்று அவர்களை துரத்தி அடித்த போது வாழ வழியின்றி தமிழகதிருக்குள் நுழைந்தவர்கள் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு படை உருவாக்கி பாஞ்சலகுறிச்சி பகுதியில் ஒரு சிறிய பகுதியை தலைமை ஏற்று நடத்திகொண்டிருந்தார் .ஆனால் முத்தரையர் சாம்ராஜ்யம் என்பது தமிழகத்தின் ஆரம்பம் ,முத்தரையர்கள்தான் தமிழகத்தின் அரிச்சுவடி முத்தரையர்கள் இன்றி தமிழக சரித்திரம் கிடையாது அப்படியுருக்க கட்டபொம்மன் ,பாளையக்காரன் ,நாயக்கர் என்பதால் அவர் முத்தரையர் கிடையாது ,இது போன்று தெளிவற்ற சரித்திரம் அறியாத வாய் மொழியாக சொல்லுவதை எல்லாம் நாம் கொண்டாடுவது நம் இனத்தை மேலும் பலவீன மாக காரணமாக ஆகிவிடும் .என்பதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் !

பாளைய காரர்கள் முத்தரையர்கள் என்றால் ,அதியமான் ,சம்புவராயர்,பாணர்கள் ,வடுகர்கள் ,என மொத்தம் ஏழு குறுநில மன்னர்கள் இருந்தனர் அவர்கள் எல்லாமே பாளயக்காரகள் என அழைக்கப்பட்டன ,அப்போ அவர்கள் எல்லோருமே முத்தரையர்கள் என்று சொன்னால் எப்படியுருக்கும் ,ஆகவே சரித்திரத்தை தெளிவாக தெரிந்து கொண்டு ,கம்மா நாய்டு வகுப்பை சார்ந்த கட்டபொம்மன் போன்றவர்களை கொண்டாடுவதை இனியேனும் நிறுத்தி கொள்ள வேண்டும் ?இன்னும் சொல்ல போனால் விஜய நகர மன்னர்கள் நாயக்கர்கள் என்றுதான் சொல்லுவார்கள் அவர்கள்தான் கட்ட பொம்மனின் முன்னோர்களை துரத்தியது ?பெல்லாரியிளிருந்து இப்படி நாயக்கர்கள் ,பாளையக்காரர்கள் என்பார்கள் எல்லாம் முத்தரையர்கள் அல்லர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !