ஞாயிறு, 3 நவம்பர், 2013

தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் திரு ,குழ ,செல்லையா அவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய போது இருந்த ஆறு  உறுப்பினர்களில் ஒருவர் ,ஆக அதிமுக நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் அதேப்போல் அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது பேராயுரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழ ,செல்லையா அவர்கள் தான் அதிமுகவில் சேர்ந்த முதல் அதிமுக உறுப்பினர் ,

அதிமுக நிறுவன உறுப்பினரான குழ ,செல்லையா நியாயமாக மாநில பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவருக்கு தஞ்சை மாவட்ட செயலாளார் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்பது அதிமுகவின் வரலாறு "முத்தரையர் "கள் எப்போதுமே களபணியாலார்களாகவே இருக்க மட்டுமே லாயக்கு என்று அப்போதே முடிவெடுத்துவிட்டார்கள் அன்றில் இருந்து இன்று வரை இதுதான் நிலைமை ,இத்தனைக்கும் புதுக்கோட்டையில் 12/08/1979 ,அன்று நடந்த முதல் "முத்தரையர் " மாநில மாநாட்டில் எம்ஜியார் கலந்துக் கொண்டார் முத்தரையர் உட்பிரிவுகளை ஒரிங்கினைத்து சாதி ஒழிப்பு மாநாடு என்று சொலப்பட்ட மாநாடு எம்ஜியார் முன் மிகவும் பிற்படுத்தப்பாடவர்களுக்கு 9000ருபாய் உச்ச வரம்பாக கொண்டு வந்து தீர்மானாமாக நிறைவேற்றப்பட்ட மாநாடு ,இதை எல்லாம் செய்தவருக்கு அதிமுக ஆட்சி வந்தவுடன் நியாயமாக அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் வழங்கப்படவில்லை ,எம்ஜியார் காலத்தில் கோவேந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ,ஆனால் மற்ற இனத்திருக்கு எத்தனை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று பார்த்தால் தெரியும் நம் இனத்தின் நிலைமை அடித்து கூறுகிறேன் நம் இனம் அதிமுகவிற்கு வாக்களித்தது போல் எந்த இனமும் வாக்கு அளித்தது இல்லை ஆனால் மற்ற இனத்தை விட குறைவாக பலன் அடைந்த இனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றால் அதுவும் முத்தரையர் இனம் தான் .

முத்தரையர் இனத்தின் இருபத்தி ஒன்பது உட்பிரிவுகளை இணைத்து அரசானை பிற்பித்தது,திருச்சி மாவட்டத்துக்கு மன்னர் பெயரை சூட்டியது தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை ,இன்னும் சொல்ல போனால் அதிமுக ஆட்சி காலம் முழுவதும் நம் இனத்தவர்கள் அமைச்ச்கர்களாக இருந்தார்களா என்பதே கேள்விகுறி ? அல்ல உண்மை !
ஆனால் எனக்கு தெரிந்து வெறும் பதினைந்து சதவீதம் வாக்குகள் மட்டுமே பெரும் திமுக ஆட்சி காலம் முழுவதும் அமைச்சர்கள் இருந்து இருக்கிறார்கள் ,திரு ,துரை ,சந்திர சேகரன் ,புலவர் செங்குட்டுவன் ,திரு என்,செல்வராஜ் என இவர்கள் அனைவரும் ஐந்தாண்டுகள் அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் ,இருவர் தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினர்களாகவும் இருந்தனர் ,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிற்றரசு மாளிகை பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது ,சென்ற திமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரையர்களை மிகவும் பிற்படத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது என பலவற்றை செய்திருக்கிறது .
விஷயத்துக்கு வருவோம் இப்போது முத்தரையர் சங்கம் வேண்டுகிறது அம்மா ,திரு ,குழ ,செல்லையா அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல பொறுப்பு வழங்குங்கள் என்று கெஞ்சும் நிலைமை தான் இன்று அவருக்கு ,யாருக்கு அதிமுகவின் நிறுவன அருவர்களில் ஒருவரான அவருக்கே இதுதான் நிலைமை !
மறந்துடாதிங்க நடப்பது நமது ஆட்சி !ஒரு பொறுப்புக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விடக்கூடாது !இருப்பது ஒரு மந்திரி அவரும் எப்போ மாற்றப்படுவார் என்று தெரியாது என்பது வேறு விஷயம் ,ஆனால் தமிழகத்தின் இன்றைய மக்கள் தொகையில் ஏறக்கொறைய இரண்டு கோடியே நாற்ப்பது லட்சம் பேர் சார்ந்தது முத்தரையர் இனம் நமக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கிறதா ? கொஞ்சம் யோசித்து பாருங்கள் குறிப்பாக இளைஞர்கள் ,இனியேனும் முழித்துகொள்வோம் ,கட்சி என்பதை நாம் இனி எந்த கட்சி நம் இனத்திருக்கு வாய்ப்புகள் தருகின்றனவோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் இல்லயேல் எந்த கட்சியானாலும் புறகணிப்போம் ,அதற்காக கறிவேப்பிலையாக நம்மை பயன்படுத்தி கொள்ள ஒரு சில அமைப்புகள் ,"கட்சி " செயல் படுகிறது அந்த கட்சியால் நமக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை ஜெயத்தப்பின்னர் நம்மை மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அவர்கள் வளர்வதருக்கு நாம் காரணியாக இருக்கபோகிறோம் அவ்வளவுதான் !அப்படிப்பட்ட கட்சிகள் பின்னாடி செல்வதருக்கு பதில் நம் இனம் தனித்தே போட்டியுட வேண்டும் பலப்டுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் நமக்கு பிற்காலத்தில் பலன் அளிக்கும் !சிந்திப்போம் !வளம் பெறுவோம் ".

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக