திங்கள், 20 ஜூன், 2011

samacheer kalvi

இனி இந்த அதிமுக அரசை யாரும் என்ன செய்து கிழித்தீர்கள் என்று யாரும் கேட்க முடியாது ?ஆமாம் 1 ஆம் மற்றும் 6ஆம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்களை விட்டு கிழிக்க வைத்துவிட்டார் ,என்ன கொடுமை இது ?சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் இந்த அடாவடி நடவடிக்கை ஏழை மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது போன்றது .மேல்தட்டு வர்கத்தின் வயிற்றில் பாலை வார்த்து விட்டார் முதல்வர் .

                                           தங்கத்தில் மேஜை கரண்டி என்பதற்காக கண்ணை குருடாக்கி கொள்ள முடியுமா என்று கேட்பார்கள் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் அதுதான் நடந்து இருக்கிறது ?

                                            மக்களின் வரிப்பணம் வீணாவதை அணைத்து மக்களும் போராட முன் வரவேண்டும் மாறாக தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு வாங்க முன்டியாடிதுக்கொண்டிருக்கிரர்கள் என்பது தான் வேதனை மக்கள் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் இலவசங்கள்" இருக்கும் ஆனா இருக்காது ", காரணம் நேற்றைய அரசு குடுத்தது இன்று இல்லை அதேப்போல் இன்று கொடுப்பது நாளை அரசில் இருக்காது  ஆனால் கல்வி சாகும் வரை இருக்கும் எனேவே மக்கள் சமச்சீர் கல்வி அமல் படுத்த மக்கள்  போராட முன்வந்து வெற்றிபெற வேண்டும் .

                                                  சமச்சீர் கல்வி முத்தரையர் ,வன்னியர் ,தலித்,அருந்ததி இனம்,போன்ற பிற்ப்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானது ,அதை புரிந்துக்கொண்டு வன்னிய மக்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்திவிட்டார்கள் ,முத்தரையர் இன மக்கள் செய்வார்களா ? முன்னின்று ஒன்று திரட்டி நாம் போராடியே ஆகவேண்டும் ,வாருங்கள் இளைஞர்களே !போராடுவோம் !

                                                  அதேப்போல் நமக்கான இட ஓதிக்கிடும் நாம் பெற்றே ஆகவேண்டும் !ஒன்றுபடுவோம் !வருங்கால சந்ததிகள் நம் பட்ட கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவோம் !தோள் கொடுங்கள் ,வென்றடுப்போம்.   
                                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக