செவ்வாய், 10 மே, 2011

2G SPECTRUM

நண்பர்களே என்ன நடந்தது இந்த பரபரப்பாக முக்கியமாக ஆங்கில ஊடகங்கள்  இந்த அளவுக்கு முக்கியம் கொடுத்து மாத கணக்கில் மூச்சி விடாமல் சங்கே முழங்கு என்கிற அளவுக்கு !செய்தி சொல்லுகிறதே என்னது இது !நான்  பால் வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அப்போது 70 வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் கடைகரர்கு புரிய வைத்தார் எனக்கும் புரிந்தது அதாவது ஒருவர் பி எஸ் என் எல் வாரியத்தில் இருந்து ஒருவர் ஏலத்தில் எடுத்து அதற்க்கான தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தி உரிமம் பெற்று  வேறு  ஒருவருக்கு விற்று விட்டார் ,அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் சேர்ந்து  விட்டது .ஆக ஊழல் எங்கே வந்தது என்றால் இன்னும் அதிக விலைக்கு  விற்கததனால் அரசுக்கு நஷ்டம் மற்றபடி விலைக்கு வாங்கியவர் அமைச்சர்க்கு பணம் கொடுத்து  விட்டார் .விற்றவருக்கு லாபம்  இதுதான் பெரியவர் கொடுத்த விளக்கம் .புரிந்ததா !உண்மையும் இதுதான் .

                                                 அவரே தொடருகிறார் இதில் அரசுக்கு நட்டம் இல்லை ,ராசா மட்டும் பொறுப்பில்லை ,இதற்கு முந்தைய அரசாங்கம் வகுத்து வைத்திருந்த கொள்கைகளே காரணம் ,கைது செய்வதனால் முந்தைய அரச்ங்கததிடமிருந்து தொடங்க வேண்டும் ,மேலும் இதற்கு முன் அதிக விலைக்கு வாங்கியவர்கள் வாங்கிய விலை அதிகம் நடத்த முடியாது என்று அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்துவிட்டார்களே ? அப்படி இருக்கும் பொழுது இன்னும் அதிக விலைக்கு விற்க முடியுமா ? நியாயமான கேள்வி ?உண்மையும் கூட ,ஏலம் முறைப்படி நடக்க வில்லை என்பது வாதம் ,அதற்கும் முந்தைய அரசே பொறுப்பு ஏன் என்றால் முதலில் வருபவருகே முன்னுரிமை என்கிற கொள்கை வகுக்கபட்டது முந்தைய அரசின் கொள்கையே , அது தற்பொழுதும் கடைபிடிக்கப்பட்டது  பின்பு ஏன் இந்த கூப்பாடு என்றால் சில நிறுவனகள் அதுவும் பகாசூர நிறுவங்கள் ஏக போகமாக அனுபவிக்க பார்த்தது அது இப்போது முடிய வில்லை நிறைய நிறுவங்கள் வந்து விட்டதால் போட்டி காரணமாக பகாசூர நிறுவங்கள் சம்பாதிக்க முடியவில்லை விளைவு ராசா சிறை காங்கிரசுக்கு 6௦ தொகுதிகள் ,கூட்டுமந்த்ரிசபைகு அச்சாரம் ,திமுகவை காலி செய்து விடலாம் ,பிறகு தமிழகத்தில் ஆதிமுக வை ஒழிப்பது சுலபம் ,
                      
                             தமிழகத்தில் ராஜாஜி இன வாரிசுகள் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது கணக்கு என பெரியவர் முடிக்கும் பொழுது எல்லாம் புரிந்து தலையை சுற்றியது .  

                             அனால் ஊடகங்கள் என்ற பெயரில் ஆதிக்க சக்திகள் மீண்டும் நாட்டாண்மை செய்ய புறப்பட்டு விட்டது என்பது மட்டும் அனைவரும் புரிந்து  கொண்டே ஆக வேண்டும் என்பது மட்டும் நிதர்சனம்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக