திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் அமைச்சர் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ,கு.ப,கிருஷ்ணன் அவர்களோடு நமது குழு சந்தித்தது நம்மோடு வந்த தெலங்கான முதிராஜ் நண்பர்கள் ஹைதராபாதில் கூட்டம் ஒன்று போடும்போது கலந்து கொள்ள அழைப்பு விடுக்க சந்தித்தோம் அப்போது ஒருமணி நேரத்துக்கும் மேல் பல்வேறு விசயங்களை விவாதிக்க முடிந்தது நமது சரித்திரம் முதல் அரசியல் வரை விவாதித்தோம் ,உண்மையில் இவர் ஒரு மனித கணினி ,அறிவுகளஞ்சியம் ,என்றால் மிகையாகது அந்த அளவுக்கு எந்த ஒரு கேள்விகேட்டாலும் சளைக்காமால் அறிவியல் பூர்வமாக ,சித்தாந்த பூர்வமாகவும் விளக்கம் தந்தார் ஆனால் ஒரு கேள்வி மட்டும் அவரை சிறிது உஷ்ணமாகியது அது இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பது குறித்த ஒரு கேள்வி ,அதற்க்கு நீங்களும் இதுபோல் கேக்கலாமா என்றார் அதாவது இன்றைக்கு பெரிய பெரிய இனங்கள் எல்லாம் எம்பிசி வகுப்பில் இருக்கிறார்கள் ,நம் எம் பி சி ஒரு பிரிவு கூட மத்தவங்கள் தான் பயன்படுத்துகிறார்கள் இன்றைக்கு எம்பிசியில் தான் போட்டி அதிகமாக உள்ளது அதற்க்கு இப்படியே இருப்பது நல்லது என்றார் இந்த முறையில் யோசிக்க வில்லையே என்று கேள்வி எழுகிறது !இன்னொரு கேள்விக்கு உண்மைய்யேலேயே சிந்திக்க வைக்க கூடிய அருமையான பதில் கிடைத்தது அதாவது பெரும்பான்மையான மக்கள் கொண்ட சமுதாயம் வாக்காளர்களை கொண்ட சமுதாயதிருக்கு அதுவும் எழுபது என்பது சதவீதம் வாக்கு பெற கூடிய கட்சி கூட நமக்கு போதுமான பிரதிநீதித்துவம் கொடுப்பதில்லையே என்ற கேள்விக்கு எப்படி கொடுப்பார்கள் கண்டிப்பாக கொடுக்க மாட்டார்கள் காராணம் நாம் எதுவுமே கேட்பதில்லையே நமக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்தானே கிடைக்கும் கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தால் எப்படி கிடைக்கும் ,ஆகவே நமக்கு தேவையானதை செய்தால் தான் ஓட்டுப்போடுவோம் என்று மற்ற இனத்தை போல் கேட்டால்தான் கிடைக்கும் என்றார் இதுதான் உண்மை !இனியாவது இதுப்போல் நடக்க வேண்டும் !சரித்திரம் ,மன்னர் சிலை என்று பல்வேறு விஷயங்கள் தெளிவாக விளக்கினார் ,"விநாயாகர்" என்ற கடவுளை நம் முன்னோர்கள் வணங்கியதில்லை இந்த ஆரியம் வந்த பின்னர்தான் விநாயகரே வந்தார் என்ற உண்மையை எடுத்துரைத்தார் ,இந்த நாடாளமன்ற தேர்தலுக்கு முன்னர் நம் சமுகம் ஒன்றிணைக்க முடியும் என்று தோன்ற வில்லை காரணம் நேரம் என்பது குறைவு ,முதலில் அனைவரும் முத்தரையர் என்று சொல்ல சொல்ல வைப்பதே பெரிய பணிதான் என்றார் அந்தந்த பகுதிகளில் அவரவர் உட்பிரிவுகளைத்தானே போட்டுக்கொள்கிறார்கள் சொல்லிக்கொள்கிறார்கள் அப்புறம் எப்படி சாத்தியம் முதலில் எல்லோரையும் முத்தரையர் என்று சொல்லும் காலம் வரவேண்டும் என்ற சவுக்கடி பதிலில் உள்ள உணமையை நாம் எப்போது உணரப்போகிறோம் தோழர்களே !அந்த நிலைமை வரும் வரை நரிகளால் நாம் வேட்டையடப் பட்டுக் கொண்டிருப்போம் என்பதுதான் நிதர்சனமான உண்மை !நாம் ஏன் நமக்குண்டான பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்பதற்கு இதைவிட விடை வேண்டுமா என்ன ?சிந்திப்போம் !நண்பர்களே !
கடைசியாக நம் விண்ணப்பம் எற்க்க்கப்பட்டது அது அடுத்த நம் கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக உறுதி அளித்தார் .அது ஒரு அறிவியல் பூர்வமான ஒரு உரையை நாம் கேக்கலாம் என்ற சந்தோசத்தோடு விடைப்பெற்றோம் மனமில்லாமல் ஆனால் நேரமில்லை அவர் தொகுதிக்கு செல்ல நேரமாகிவிட்டது !நம்மால் தாமதமாகவே கிளம்பினார் !அடுத்த கூட்டத்தில் நாம் அனைவரும் அவரை சந்திப்போம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக